TNPSC Important Tamil Current Affairs


1. மத்திய அரசின் திட்டங்கள் அமலாவதை கண்காணிக்கும் ‘திஷா கமிட்டி’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது


eva stalin ias academy

மத்திய அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திஷா கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி, முதல்-அமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும், அதன் உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர். நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், பி.ரவீந்திரநாத்குமார், கே.நவாஸ்கனி ஆகியோரும்;மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும்; மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், மு.பூமிநாதன், ஜெ.எம்.எச்.அசன் மவுலானா மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் உள்ளனர்.

என்னென்ன பணிகள்?

மேலும், இக்குழுவில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து, திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்யும்.அதோடு, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லது நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை இக்குழுவின் பணியில் அடங்கும்.

முறைகேடு புகார்கள்

மேலும், வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிலப்பிரச்சனைகள் தொடர்பாக மாநில அலுவலர்களால் தேவையான காலக்கெடுவை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்தவுள்ள தடைகளை மீளாய்வு செய்தல்,

திட்டங்களை செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் முறைகேடுகள், பயனாளிகளின் தவறான தேர்வு, முறைகேடாக நிதியை திசை திருப்புதல் போன்ற புகார்களைப் பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தல் ஆகிய பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், மத்திய அரசுத் துறை திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் கீழ் கண்காணிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்.

2. ரூ.5 லட்சம் வரை டிஜிட்டல் முறையில் (ஐ.எம்.பி.எஸ். எனப்படும் ‘இம்மீடியட் பேமண்ட் சர்வீஸ்’) பண பரிமாற்றம் செய்யலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

tamil current affairs

வங்கிகளில் ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள் ஆர்.டி. ஜி.எஸ்., ஐ.எம்.பி.எஸ். மற்றும் நெப்ட் ஆகிய 3 முறைகளில் பணப்பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.இதில் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு டிஜிட்டல் முறையில் பணம் அனுப்ப ஐ.எம்.பி.எஸ். எனப்படும் ‘இம்மீடியட் பேமண்ட் சர்வீஸ்’ என்ற முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பும் போது பணத்தை பெற்றுக்கொள்ள காத்திருக்க தேவையில்லை. அந்த தொகை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இந்த சேவையின் மூலம் 24 மணி நேரமும் பணத்தை உடனடியாக அனுப்ப முடியும். விடுமுறை நாட்களிலும் கூட பணம் அனுப்பலாம்.

ஐ.எம்.பி.எஸ். சேவையை மொபைல் பேங்கிங் செயலி, நெட் பேங்கிங், வங்கி கிளைகள், ஏ.டி.எம். மையம் ஆகியவற்றின் வாயிலாக பெற முடியும்.இந்த சேவையில் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் அனுப்ப முடியும் என்ற வரம்பு இருந்தது. இது வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் பண கொள்கை தொடர்பான கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.மேலும் ஐ.எம்.பி.எஸ். முறையில் பணம் அனுப்புவதற்கான தினசரி வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

3. இந்திய விமானப்படை தினம்: அக்டோபர் 8

tamil current affairs

இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8-ம் தேதியே இந்திய விமானப்படை தினமாக கொண்டாப்படுகிறது. பிரிட்டிஷ் ராயல் விமானப் படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932 அன்று இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடந்ததில்லை. இரண்டாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் இந்திய விமானப்படை பங்கேற்றது.

இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறி வருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், ‘ராயல் இந்தியன் ஏர் போர்ஸ்’ என்ற பெயரை இந்திய விமானப் படைக்கு வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு ராயல் இந்திய விமானப்படையாக பெயர் மாற்றம் பெற்றது இந்திய விமானப்படை. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய அரசுக்குக் கீழ் செயல்பட்டு வந்த விமானப்படை இந்திய அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது.

அப்போதும் `ராயல் இந்திய விமானப்படை' என்றே பெயர் பெற்றிருந்தது. 1950-ம் ஆண்டு, குடியரசு நாடாக மாறிய பின்னர் `ராயல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு `இந்திய விமானப்படை' என்று பெயர் மாற்றப்பட்டது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து இந்திய விமானப்படை உலகில் நான்காவது வலிமையான விமானப்படையாக உள்ளது. ரஃபேல், மிராஜ் 2000, மிக் 21, மிக் 27, மிக் 29, ஜாகுவார், சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்கின்றன.

விமானப்படைக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் 60 தளங்கள் உள்ளன. இந்தியாவுக்கு வெளியில் தஜிகிஸ்தானில், இந்திய விமானப் படைக்கு ஒரு தளம் உள்ளது. இந்தியா விமானப் படையில் தற்போது தலைமை தளபதியாக உள்ளவர் ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி

4. அமைதிக்கான நோபல் பரிசு 2021

tamil current affairs

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இருவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதைப் பெறுவார்கள் என்று நோபல் பரிசு அமைப்பு தெரிவித்துள்ளது.

5. வேதியியலுக்கான நோபல் பரிசு 2021

tamil current affairs

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 2021ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டது,இரு விஞ்ஞானிகளும் வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis ) கருவியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதுவேதியியலில் இருவித வினையூக்கிகளே (உலோகங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக நினைத்துவந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2021

tamil current affairs

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தான்சானியாவின் ஸான்ஸிபார் என்ற இடத்தில் 1948ல் பிறந்த அப்துல் ரசாக், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உள்ளார். இவரது 'பாரடைஸ்' நாவல், 1994ம் ஆண்டு 'புக்கர்' பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது.வளைகுடா நாடுகளில் அகதிகள் பிரச்னை, காலனி ஆதிக்கம் குறித்து இவர் சமீபத்தில் எழுதிய புத்தகத்திற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

7. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது

tamil current affairs

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைவசப்படுத்தியுள்ளது. டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தைதான், மத்திய அரசு கடந்த 1953-ம் ஆண்டு ஏர்-இந்தியா என்ற பெயரில் தேசியமயமாக்கியது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஏர்-இந்தியாவை விற்பதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெறுமென மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

8. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் தேர்வுு

tamil current affairs

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக, வேல்ஸ் பல்கலை நிறுவனர் ஐசரி கணேஷ், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதன்படி, சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது.இதில், வேல்ஸ் பல்கலை நிறுவனரும், இந்திய தேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவருமான ஐசரி கணேஷ், போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9. கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடுுு

tamil current affairs

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு `கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது.நறுமணப் பயிரான கிராம்பு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுஉள்ளது. இது, தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும்.

10. இந்தியா-இங்கிலாந்து கூட்டு ராணுவப் பயிற்சி ‘அஜேயா வாரியர்’ தொடங்கியதுுுு

tamil current affairs

இந்தியாவின் 6 வது பதிப்பு – இங்கிலாந்து கூட்டு நிறுவன அளவிலான இராணுவப் பயிற்சி அஜேயா வாரியர் உத்தரகாண்டின் சவுபாத்தியாவில் தொடங்கியது. இந்த பயிற்சியின் போது இரு நாட்டு படைகள் ஒருவருக்கொருவர் ஆயுதங்கள், உபகரணங்கள், யுத்த தந்திரங்கள், நுட்பங்கள் போன்றவற்றுடன் தாங்கள் இணைந்து செயல் பட வாய்ப்பு ஏற்படும்.

11. சத்தீஸ்கரில் இந்தியாவின் புதிய புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதுு

tamil current affairs

குரு காசிதாஸ் தேசிய பூங்கா மற்றும் தமோர் பிங்லா வனவிலங்கு சரணாலயத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் சத்தீஸ்கர் அரசின் திட்டத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.இது மாநிலத்தின் வடக்குப் பகுதியில், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் எல்லையில் அமைந்துள்ளது.

Title of the document Title of the document