WELCOME TO EVA STALIN IAS ACADEMY

Dailt TNPSC Tamil Current Affairs-October


1. FIFA கால்பந்து அமைப்பு, 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் U-17 மகளிர் உலகக் கோப்பையின் “Ibha” சின்னத்தை வெளியிட்டதுி


tamil current affairs

FIFA, U-17 மகளிர் உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர் 11-30 வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்க்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை ஃபிஃபா வெளியிட்டது. “இபா” ஆசிய சிங்கம் U-17 மகளிர் உலகக் கோப்பை இந்தியா 2022 இன் அதிகாரப்பூர்வ சின்னமாக அறிவிக்க பட்டது.

2. பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு 2021

tamil current affairs

2021-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize) அமெரிக்காவை சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா D.அங்ரிஸ்ட் (Joshua D. Angrist) மற்றும் கொய்டோ W.இம்பென்ஸ் (Guido W. Imbens)ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதற்காக டேவிட் கார்ட்டுக்கு ஒரு பாதியும், மற்றொரு பாதி ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2021

tamil current affairs

பெண் குழந்தைகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

4. திருநங்கையர் நல வாரியம் 13 உறுப்பினர்கள் நியமனம்

tamil current affairs

தமிழகத்தில் திருநங்கையர் நல வாரியம் 2008ல் அமைக்கப்பட்டது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார்.அரசு துறைகளின்பிரதிநிதிகள் அலுவல் சார் உறுப்பினர்களாகவும் திருநங்கையர் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.ஏற்கனவே அலுவல் சாரா உறுப்பினர்களாக இருந்தவர்களின் பதவி காலம் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தது.அதனால் புதிதாக 12 திருநங்கையர் ஒரு பெண் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் ரியா; துாத்துக்குடி பியூட்டி; சென்னை அனுஸ்ரீ ராதா அருணா சுதா அருண் கார்த்திக்; செங்கல்பட்டு சர்மிளா நிலா; மதுரை பிரியா பாபு;திருச்சி மோகனாம்பாள் நாயக்; தேனி முனியாண்டி என 12 திருநங்கையர் மற்றும் சென்னையை சேர்ந்த பெண் வித்யா தினகரனையும் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

5. ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாய்வு

tamil current affairs

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகழாய்வு பணியை தொடங்கியுள்ளனர். இந்தியாவிலேயே முதன்முதலாக 1876-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி தொடங்கியது. ஜெர்மனி தொல்லியல் அறிஞர் ஜாகோர் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து 1903-1904 ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்தன. இவை அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் 2003ம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஆய்வறிக்கை வெளியான நிலையில், ஆதிச்சநல்லூரில் 17 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக தொல்லியல் துறை சார்பிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளது. கடந்த 2003 முதல் 2004-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் 600 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்ற நிலையில், தற்போது 116 சதுர மீட்டர் அளவில் நடைபெற உள்ளது.

6. இந்திய விண்வெளி சங்கம் தொடக்கம்!

tamil current affairs

இந்திய விண்வெளி சங்கத்தைப் (ஐஎஸ்பிஏ) பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். ஐஎஸ்பிஏ என்பது விண்வெளி, செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மை தொழில்துறைச் சங்கம் ஆகும். இந்தியாவை தற்சார்புமிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாக்கவும் விண்வெளி அரங்கில் முன்னணியில் திகழும் நாடாக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மைஇந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் உள்ளிட்டோர் இதன் நிறுவன உறுப்பினர்கள் ஆவர்.கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இந்தியா ஆகி நிறுவனங்கள் இதர முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.

7. பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் தந்தை கான் காலமானார்

tamil current affairs

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்லாமாபாத்தில் காலமானார். அவருக்கு வயது 85. ஏ.க்யூ. கான் என்று பரவலாக அறியப்பட்ட அப்துல் கதீர் கான் மத்திய பிரதேச தலைநகராக உள்ள போபல் நகரில் பிறந்தவர். ஏ.க்யூ.கான் என்று அழைக்கப்படும் அப்துல் காதீர் கான், அணுக்கரு இயற்பியலாளர் மற்றும் உலோகவியல் பொறியியலாளர் ஆவார். பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்திற்கான யுரேனியம் செறிவூட்டுதல் திட்டத்தை நிறுவிய அவர், ககூதா ஆராய்ச்சி ஆய்வகங்களை 1976ஆம் ஆண்டில் நிறுவினார். 2001ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அதன் மூத்த விஞ்ஞானியாகவும், தலைவராகவும் இருந்த ஏ.க்யூ.கான், பாகிஸ்தானின் மற்ற தேசிய அறிவியல் திட்டங்களிலும் பங்காற்றியுள்ளார்.

8. ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் நியமனம்

tamil current affairs

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவியும், உறுப்பினர்களில் ஒருவராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. கரண்சிங் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியது. ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

9. உலக அஞ்சல் தினம்

tamil current affairs

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

10. இந்தியா அரசு கிர்கிஸ் குடியரசு வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன் உதவி செய்கிறது

tamil current affairs

இந்திய வெளியுறவு அமைச்சர் கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு தனது நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக கிர்கிஸ்தானை சென்றடைந்தார். அதன் ஒரு பகுதியாக கிர்கிஸ்தான் வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி அளிக்க இந்தியா ஒப்பு கொண்டுள்ளது. இதற்கு பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஆர்மீனியாவுக்கு வருகை தருகிறார். ஆர்மீனியாவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகை தருவது இதுவே முதன் முறையாகும்.

11. வங்காள விரிகுடாவில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைக்கு இந்த ஆண்டுக்கான மலபார் கடற்படை பயிற்சியின் இரண்டாம் கட்ட பயிற்சியை தொடங்கின.

tamil current affairs

குவாட் நாடுகள் - இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா வங்காள விரிகுடாவில் இந்த ஆண்டுக்கான மலபார் கடற்படை பயிற்சியின் இரண்டாம் கட்ட பயிற்சியை தொடங்கின.அக்டோபர் 12-15 வரை நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சியானது,மேம்பட்ட மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகள், கடற்படை பரிணாமம் மற்றும் ஆயுத துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.குவாட் நாடுகளின் கடற்படைகள் ஆகஸ்ட் 26 முதல் 29 வரை பசிபிக் பெருங்கடல் தீவான குவாம் அருகே முதல் கட்ட பயிற்சிகளை நடத்தின.

12. வங்கதேசம் தனது இரண்டாவது அணுமின் நிலையத்தை அமைக்க உள்ளது: பிரதமர் ஷேக் ஹசீனா

tamil current affairs

வங்காளதேச அரசு தனது இரண்டாவது அணு மின் நிலையத்தை நாட்டின் தெற்கு பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளது.ரூப்பூர் அணு மின் நிலையத்தில்அணு உலை அழுத்தக் கப்பலை நிறுவும் பணியைத் திறந்து வைத்த பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையம் முடிந்த பிறகு மற்றொரு மின் நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார்.வங்காளதேசத்தின் முதல் அணு மின் நிலையமான ரூப்பூர் ரஷ்யாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் கட்டப்பட்டது. 2400 மெகாவாட் ரூப்பூர் அணுமின் நிலையம் 2024 க்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Title of the document Title of the document