WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை SITMEX கடற்படை பயிற்சியை ஈடுபட்டனி


சிங்கப்பூர்-இந்தியா-தாய்லாந்து கடல்சார் பயிற்சி (SITMEX) 21 பயிற்சி அந்தமான் கடலில் நடைபெற்றது. சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடற்படைப் பயிற்சி நவம்பர் 15 முதல் 16 வரை இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் இந்திய கடற்படையின் பிரதிநிதியாக இந்திய கடற்படை கப்பல் (INS) கார்முக் கலந்து கொண்டது. SITMEX பயிற்சி 2019 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடுகளுக்கு இடையே கடல்சார் உறவுகள் மற்றும் இயங்குநிலையை மேம்படுத்த உதவுகிறது.

2. விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யாு

கடந்த 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முதல் முறையாக ‘ஸ்புட்னிக்-1’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தியது. அன்று தொடங்கி தற்போது வரை நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை உலக நாடுகள் விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. தகவல் தொடர்பு, இணைய சேவை, ஜி.பி.எஸ்., வானிலை முன்னறிவிப்பு என பல்வேறு தேவைகளுக்காக உதவும் இந்த செயற்கைக்கோள்கள், குறிப்பிட்ட காலத்தில் செயலிழந்து விடுகின்றன. இவ்வாறு செயலிழந்த செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் விண்வெளியிலேயே மிதந்து கொண்டிருக்கும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் சில சமயங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அவற்றை வெடிக்கச் செய்து செயல் இழக்க செய்கின்றன.இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா, விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்துள்ளது. இந்த சோதனையில் ரஷ்யா, தனது ஏவுகணையின் மூலமாகச் செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட செலினா டி என்ற தனது சொந்த செயற்கைக்கோளை அழித்துள்ளது.

3. மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மத்திய, மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

4. சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை ஐகோர்ட்டு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது.இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பிற்கு வரும் வரை தலைமை நீதிபதி பணிகலை தற்காலிகமாக நீதிபதி துரைசாமி கவனிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

5. அகில இந்திய சபாநாயகர்கள் (All India Presiding Officers’ Conference) 82ஆவது மாநாடு இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்று வருகிறது

அகில இந்திய சபாநாயகர்கள் கலந்து கொள்ளும் 82ஆவது மாநாடு இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர் ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை தளம் என்ற யோசனையை முன் வைத்தார்.மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் என அனைவரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டுள்ளார்.சபாநாயகர்கள் மாநாட்டில் மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் சார்பாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.சட்டமன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர்கள் காலவரம்பின்றி முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்துக்குறியது என தெரிவித்த அப்பாவு, கோப்புகளை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மரபு இருந்தும் ஆளுநர் அதை செய்வதில்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும், மாநில அரசால் அனுப்பப்படும் கோப்புகள் மீது மாநில ஆளுநர்கள் முடிவெடுக்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும் எனவும் அப்பாவு அப்போது வலியுறுத்தினார்.

6. தேசிய பத்திரிகை  தினம் நவம்பர் 16

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா செயல்படத்துவங்கிய தினமான நவம்பர் 16-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பத்திரிகை தினம்' ஆக கொண்டாடப்படுகிறது.பத்திரிகைத் துறையில் தொழில்முறை நெறிமுறைகளைப் பேணுவதற்கான சட்டரீதியான அதிகாரம் கொண்ட நோக்கத்திற்காக இந்திய பத்திரிகை கவுன்சில் 16 நவம்பர் 1966 நிறுவப்பட்டது.1997 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 தேசிய பத்திரிக்கை தினத்தை பத்திரிக்கை கவுன்சில் கொண்டாடி வருகிறது. இந்திய பிரஸ் கவுன்சில் என்பது 1966 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டரீதியான, தீர்ப்பளிக்கும் அமைப்பாகும்.

7. அண்டார்டிகாவிற்கு 41வது அறிவியல் பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது

அண்டார்டிகாவிற்கான 41-வது அறிவியல் பயணத்தை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது, 23 விஞ்ஞானிகள் மற்றும் துணைப் பணியாளர்கள் அடங்கிய முதல் குழு இந்திய அண்டார்டிக் நிலையமான மைத்ரியை கடந்த வாரம் அடைந்தது. மேலும் நான்கு குழுக்கள் 2022 ஜனவரி நடுப்பகுதியில் அண்டார்டிகாவில் தரையிறங்கும். 41-வது பயணத்தில் இரண்டு முக்கிய திட்டங்கள் உள்ளன. பாரதி நிலையத்தில் உள்ள அமெரி பனி அடுக்குகளின் புவியியல் ஆய்வுகளை உள்ளடக்கியது முதல் திட்டம் ஆகும். இந்தியாவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான தொடர்பை ஆராய இது உதவும்.அறிவியல் ஆய்வுகள் மற்றும் மைத்ரிக்கு அருகில் 500 மீட்டர் பனிக்கட்டியை துளையிடுவதற்கான ஆயத்த வேலைகளை உள்ளடக்கியது இரண்டாவது திட்டமாகும். பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வமைப்பு மற்றும் நார்வே போலார் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றுடன் இணைந்து பனிக்கட்டி துளையிடும் பணி மேற்கொள்ளப்படும்.1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டம், 40 அறிவியல் பயணங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தக்ஷின் கங்கோத்ரி (1983), மைத்ரி (1988) மற்றும் பாரதி (2012) என பெயரிடப்பட்ட மூன்று நிரந்தர ஆராய்ச்சி தளங்களை அண்டார்டிகாவில் உருவாக்கியுள்ளது.2022-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில்/ஏப்ரல் தொடக்கத்தில் குழுவினர் கேப் டவுனுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41-வது பயணத்தை துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் விஞ்ஞானி டாக்டர் ஷைலேந்திர சைனி (பயண தலைவர்), இந்திய வானிலை துறை நிபுணர் திரு ஹுய்டிரோம் நாகேஸ்வர் சிங் (மைத்ரி நிலைய தலைவர்) மற்றும் இந்திய புவிகாந்தவியல் நிறுவன விஞ்ஞானி திரு அனூப் கலையில் சோமன் (பாரதி நிலைய தலைவர்) வழிநடத்துகின்றனர்.

8. தேசிய வலிப்பு தினம் நவம்பர் 17 அன்று அனுசரிக்கப்பட்டது

இந்தியாவில், வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17-ஆம் தேதி, எபிலெப்ஸி அறக்கட்டளையால் தேசிய வலிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.கால்-கை வலிப்பு என்பது மூளையில் ஏற்படும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும். நவம்பர் மாதம் ‘தேசிய கால்-கை வலிப்பு விழிப்புணர்வு மாதமாக’ அனுசரிக்கப்படுகிறது.

9.அருணாச்சலத்தின் “கெய்சர்-இ-ஹிந்த்” மாநில பட்டாம்பூச்சியாக அங்கீகரிக்கப்பட்டது

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு தலைமையிலான மாநில அமைச்சரவை, “கெய்சர்-இ-ஹிந்த்” ஐ மாநில பட்டாம்பூச்சியாக அங்கீகரித்தது.Kaiser-i-Hind அறிவியல் ரீதியாக Teinopalpus imperialis என்று அழைக்கப்படுகிறது.இதன் பொருள் இந்தியாவின் பேரரசர் ஆகும்.இந்த பட்டாம்பூச்சி 90-120 மிமீ இறக்கைகள் கொண்டது. இது கிழக்கு இமயமலையில் 6,000-10,000 அடி உயரத்தில் நன்கு மரங்கள் நிறைந்த நிலப்பரப்பில் ஆறு மாநிலங்களில் காணப்படுகிறது.

10. தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவராக VVS லக்ஷ்மன் நியமிக்க படுகிறார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) அடுத்த தலைவராக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படுவார் என்று உறுதி செய்துள்ளார்.

11. இந்தியா அதன் முதலாவது தணிக்கை தினத்தை நவம்பர் 16 அன்று அனுசரித்தது

தணிக்கை தினமானது,இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அமைப்பின் வரலாற்றுத் தோற்றம் மற்றும் கடந்த பல ஆண்டுகளாக நிர்வாகம் அளித்த பங்களிப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. தற்போது, ​​ஜம்மு காஷ்மீர் யூடியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு இந்தியாவின் சிஏஜி ஆகப் பணியாற்றி வருகிறார்.இவர் இந்தியாவின் 14வது சி.ஏ.ஜி. அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 2020 இல் தொடங்கியது.

12.அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர் பதவிக்காலம்- அவசரச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை இருப்பதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் திருத்தச்சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.1997- ஆம் ஆண்டுக்கு முன்பாக சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் வரையறுக்கப்படவில்லை. சிபிஐ இயக்குநர்களை எப்போது வேண்டுமானாலும் அரசால் பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. எனினும், வினித் நரைன் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் என நிர்ணையித்தது.

13.மேகாலயாவில் 44வது வாங்கலா திருவிழா தொடங்கியது

மேகாலயாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அறுவடை திருவிழா நடைபெறுவது வழக்கம்.  தமிழகத்தின் உருமி போல வங்கலா வாத்தியங்கள் இசைக்க பாரம்பரிய உடையுடன் கலைஞர்கள் நடனமாடினர். மேகாலயாவின் பல்வேறு பழங்குடியினர்களின் கலாச்சார நிகழ்வுகளை மாநில அரசாங்கம் ஊக்குவிக்கிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழாவில் உள்நாட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கரோஸ் பழங்குடியினரின் அறுவடைக்குப் பிந்தைய திருவிழாவாகும், இது கரோஸின் சூரியக் கடவுளான ‘சல்ஜோங்கை’ கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது, இது அறுவடை காலத்தின் முடிவையும் குறிக்கிறது.1976 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இது கரோ பழங்குடியினரின் மிக முக்கியமான திருவிழாவாகும் மற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

14. 6வது இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு ராணுவப் பயிற்சி EX சக்தி 2021 தொடங்கியதுை

இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “EX சக்தி 2021” பயிற்சியின் 6வது பதிப்பை நவம்பர் 15 முதல் 26, 2021 வரை பிரான்சின் Frejus இல் நடக்கிறது. இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் காலாட்படை பட்டாலியனும், பிரான்ஸ் ராணுவம் 6வது லைட் ஆர்மர்ட் படைப்பிரிவின் 21வது மரைன் காலாட்படை படைப்பிரிவின் துருப்புகளும் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.

15. ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தெரிவானார். இந்தியாவில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு, இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனுக்கு மாற்றப்பட்டது.

16. உலக நீரிழிவு நாள் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.

15.ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.

உலக நீரிழிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதில், செவிலியர்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021-23 உலக நீரிழிவு நாளுக்கான கருப்பொருள்: “நீரிழிவு பராமரிப்புக்கான அணுகல்”.2007 ஆம் ஆண்டு பொதுச் சபை, 61/225 தீர்மானத்தை நிறைவேற்றி, நவம்பர் 14 ஆம் தேதியை உலக நீரிழிவு நாளாகக் குறித்தது.

17. குழந்தைகள் தினம் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்பட்டது

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குழந்தைகள் தினம் ‘பால் திவாஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறதுகுழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு மற்றும் கல்வி பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

18. இந்திய கடற்படைக்கு 4வது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலான ‘வேலா’ வழங்கப்பட்டது

ப்ராஜெக்ட்-75, யார்டு 11878 இன் 4வது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது, இது INS (இந்திய கடற்படைக் கப்பல்) வேலாவாக இயக்கப்படும்.பிராஜெக்ட்-75 ஆனதுபிரான்சின் ஒத்துழைப்புடன் Mazagon Dock Shipbuilders Limited (MDL) மும்பை (மகாராஷ்டிரா) மூலம் ஸ்கார்பீன் வடிவமைப்பின் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிப்பதை உள்ளடக்கியது.தற்போது, ​​ப்ராஜெக்ட்-75ன் கீழ் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் செயல்படுகின்றன. ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் கல்வாரி மற்றும் ஐஎன்எஸ் கந்தேரி.

19. ராஜ்யசபா செயலராக பி.சி.மோடி நியமனம்

மத்திய நேரடி வரிகள் வாரிய முன்னாள் தலைவர் பி.சி.மோடி, ராஜ்யசபா செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பி.சி.மோடி, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராகவும் பணிபுரிந்தவர். தற்போது அமைச்சரவை செயலருக்கு இணையான அந்தஸ்து உடைய பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுஉள்ளார். இவர், ஆக., 2022ம் ஆண்டு வரை இப்பதவியை வகிப்பார்.

20. நேபாள ராணுவத் தளபதிக்கு குடியரசுத் தலைவர் ‘ஜெனரல் ஆஃப் இந்தியன் ஆர்மி’ பதவியை வழங்கினார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேபாள ராணுவத் தலைவர் ஜெனரல் பூர்ண சந்திர தாபாவுக்கு இந்திய ராணுவத்தின் கெளரவ ஜெனரல் பதவியை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, முப்படைகளின் தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 1950 ஆம் ஆண்டு தொடங்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் பிரபு ராம் சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் ‘இந்திய ராணுவத்தின் ஜெனரல்’ என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டது.கடந்த ஆண்டு நவம்பரில் காத்மாண்டுவுக்குச் சென்ற இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நரவனேவுக்கு நேபாளம் ‘ஜெனரல் ஆஃப் நேபாள ராணுவம்’ என்ற கௌரவப் பதவியை வழங்கியது.

Title of the document Title of the document