WELCOME TO EVA STALIN IAS ACADEMY

Weekly TNPSC Tamil Current Affairs


1. குஷி நகர விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி


tamil current affairs

உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்திய விமான சேவை திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 900க்கும் மேற்பட்ட புதிய பாதைகளில் விமான சேவை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இதில் 350 வழித்தடங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. 50க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அல்லது முன்பு சேவையில் இல்லாதவை செயல்படத் தொடங்கியுள்ளன.உத்தர பிரதேசத்தில், குஷிநகர் விமான நிலையத்திற்கு முன்பு 8 விமான நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.லக்னெள, வாரணாசி மற்றும் குஷிநகருக்குப் பிறகு ஜெவார் சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அது தவிர, அயோத்தி, அலிகார், அசம்கர், சித்ரகூட், மொரதாபாத் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய இடங்களில் விமான நிலையத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றுள்ளன.

2. நீர்மூழ்கி கப்பலிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியது

tamil current affairs

பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தொலைதூரம் இலக்கு வைக்க முடியும், வேகமாக செல்ல முடியும் மற்றும் அதிக `லோட்`களை சுமந்து செல்ல முடியும்.வட கொரியா பொதுவாக தனது நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்தது. இந்த சின்போ துறைமுகம் வட கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது. மேலும் அந்த ஏவுகணை `ஜப்பானின் கடற்கரை` என்ற பகுதியில் விழுந்துள்ளது.இந்த குறிப்பிட்ட ஏவுகணை 450 கிமீ பயணித்துள்ளதாகவும், அதிகபட்சம் 60கிமீட்டர் உயரம் வரை சென்றது என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.மேலும் 2016ஆம் ஆண்டு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப் பயன்படுத்தப்பட்ட அதே நீர்மூழ்கி கப்பலைதான் இப்போதும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கீழடி சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம்

tamil current affairs

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை,அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம்கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்.19-ம் தேதியில் இருந்து செப்.30-ம் தேதி வரை நடந்தன.இதில் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது கண்டறிந்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது 7-ம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் உறைகிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 7-ம்கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாது. அப்படியே, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி ‘அகழ் வைப்பகம்’ ஏற்படுத்தப்படும். அகழாய்வு குழிகள் திறந்தநிலையில் வைப்பது இதுவே முதல்முறை. மேலும் திறந்தவெளியில் பார்வைக்கு வைக்கும்போது, கட்டுமானங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலம் மேற்கொள்ளப்படும்.

4. உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71-ஆவது இடம் பிடித்துள்ளது.

tamil current affairs

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71-ஆவது இடம் பிடித்துள்ளது. மலிவாக உணவு கிடைக்கும் நாடுகளில் இந்தியாவை பாக்கிஸ்தான் பின்னுக்கு தள்ளியுள்ளது. சீனா 34 வது இடத்தை பிடித்துள்ளது

5. உணவு பாதுகாப்பு குறியீடு…! மூன்றாவது இடத்தில் தமிழகம்…!

tamil current affairs

பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில், மாநிலங்களின் பாதுகாப்பை அளவிடும் வகையில், உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும், மேகாலயா இரண்டாவது இடத்திலும், மணிப்பூர் 3-வது இடத்திலும் உள்ளது.

6. இல்லம் தேடி கல்வி திட்டம்

tamil current affairs

கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்க தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தமாக 17 லட்சம் தன்னார்வலர்கள் வரை இந்த திட்டத்திற்கு தேவைப்படும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். 1 முதல் 5 வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்க 12-ம் வகுப்புவரை தன்னார்வலர்கள் படித்திருந்தால் போதும். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தபடும். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். தனியார் பள்ளி மாணவர்களும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயன் பெறலாம்.

7. நார்வேயில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய பிரதமராக ஜோனாஸ் காஹ்ர் ஸ்டோர் வெற்றி பெற்றார்

tamil current affairs

நார்வேயில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜோனாஸ் காஹ்ர் ஸ்டோர் தலைமையிலான நார்வேயின் இடதுசாரி எதிர்க்கட்சி வெற்றி பெற்றது. செப்டம்பர் 2021 இல், ஸ்டோர் லேபர் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது, அதைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் எர்னா சோல்பெர்க் மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகியது. அதன் படி நார்வேயின் தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜோனாஸ் காஹ்ர் ஸ்டோர், அக்டோபர் 14, 2021 முதல் நார்வே பிரதமராக பொறுப்பேற்றார்.

8. இந்தியா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது

tamil current affairs

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலுக்கு (UNHRC) இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. UNHRC யில் இந்தியாவின் பதவிக்காலம் 2022 முதல் 2024 வரை இருக்கும். அர்ஜென்டினா, பெனின், கேமரூன், எரித்ரியா, பின்லாந்து, சாம்பியா, ஹோண்டுராஸ், இந்தியா, கஜகஸ்தான், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, மாண்டினீக்ரோ, பராகுவே, கத்தார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் UNHRC யின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ரஷ்யா-சீனா நாடுகள் இணைந்து ஜப்பான் கடலில் "கூட்டு கடல் 2021" என்ற கடற்படை பயிற்சியை நடத்துகின்றன

tamil current affairs

ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியான "கூட்டு கடல் 2021" ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில், ஜப்பான் கடலில், அக்டோபர் 14, 2021 அன்று தொடங்கியது. அக்டோபர் 17, 2021 அன்று பயிற்சிகள் முடிவடையும். போர் பயிற்சியின் போது, ​​ஒருங்கிணைந்த படை எதிரி மேற்பரப்பு கப்பல்களைப் பின்பற்றவும், வான்-பாதுகாப்பு பயிற்சிகளை நடத்தவும் வடிவமைக்கப்பட்ட இலக்குகளை சுடவும் இரு நாடு கடற்படைகள் பயிற்சி செய்யும்.

10. வியாழன் சிறு கோள்களை ஆராய்ச்சி செய்யும் நாசா விண்கலம் லூசி

tamil current affairs

சூரியக் குடும்பத்தின் பிறப்பு ரகசியத்தை அறிய உதவி செய்யும் புதைபடிவங்கள் என்று கருதப்படும் விண்கல் கூட்டத்தை ஆராய வியாழன் கோள் நோக்கி சனிக்கிழமை கிளம்பியது நாசாவின் லூசி விண்கலம். வியாழனைச் சூழ்ந்து பயணிக்கும் இந்த விண்கல் கூட்டத்திலே சூரியக் குடும்பத்தின் பிறப்பு, பரிணாமம் ஆகியவற்றுக்கான ரகசியம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.குயவர்கள் பானை செய்யும்போது மீந்த மண் கட்டிகள் போல, கோள்கள் உருவானபோது மீந்தவையே இந்த விண் கற்கள் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். டிராஜன்கள் என்று அழைக்கப்படும் இந்த விண்கற்களை ஆராயவே ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் விண்வெளி நிலையத்தில் புறப்பட்டது லூசியின் பயணம்.இந்த லூசி என்ற பெயரிலேயே ஒரு சுவாரசியமான கதை உள்ளது. ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மனிதப் புதை படிவத்துக்கு லூசி என்று பெயர் வைத்தார்கள்.இந்த லூசியை ஆராய்ந்தபோதுதான், நமது மனித இனமாகிய ஹோமோ சேபியன்ஸ் எப்படி தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சிக்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன.அதைப் போல சூரியக் குடும்பத்தின் தோற்றத்தின் ரகசியத்தை கண்டறியும் என்பதற்காகவே வியாழனை நோக்கி கிளம்பும் விண்கலத்துக்கு லூசி என்று பெயர் சூட்டியது நாசா. லூசியின் பணி வாழ்க்கை 12 ஆண்டுகள் ஆகும்.

11. உலக உணவு தினம் – அக்டோபர் 16

tamil current affairs

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

12. சூரியனை ஆய்வு செய்ய சீனா முதல் ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது

tamil current affairs

சீனா தனது முதல் சூரிய ஆய்வு செயற்கைக்கோளை லாங் மார்ச் -2 D ராக்கெட்டில் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோளுக்கு ‘ Xihe’ என்று பெயரிடப்பட்டது. இந்த செயற்கைக்கோளை சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (CASC) உருவாக்கியுள்ளது.

13. அக்டோபர் 15 - உலக மாணவர்கள் தினம்

tamil current affairs

அக்டோபர் 15, 1931 அன்று பிறந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் மாணவர்களுக்காக அப்துல் கலாம் செய்த சேவைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2010 ல் அக்டோபர் 15 ஐ உலக மாணவர் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை கொண்டாடும் வகையில் உலக அமைப்பு ஒரு கருப்பொருளை முடிவு செய்கிறது. இந்த ஆண்டு, உலக மாணவர்கள் தினத்தின் கருப்பொருள் "மக்கள், கிரகம், செழிப்பு மற்றும் அமைதிக்காக கற்றல்" ஆகும்.

14. சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் - அக்டோபர் 13

tamil current affairs

உலகளாவிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989-ல் தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. பேரிடர் மேலாண்மையின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளில், மக்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பேரிடர் அபாய குறைப்பு தினத்தின் நோக்கமாகும்.

15. பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமனம்

tamil current affairs

பிரதமர் மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே. அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார்

16. ‘எக்ஸ் யூத் அபியாஸ் 21’ எனும் அமெரிக்க இந்திய ராணுவ கூட்டு பயிற்சி அலாஸ்காவில் துவங்கியது

tamil current affairs

இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி 17-வது முறையாக இணைந்து நடைபெறுகிறது. “எக்ஸ் யுத் அபியாஸ் 2021”-ல் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக 350 வீரர்களை கொண்ட இந்திய ராணுவ குழு அமெரிக்காவில் உள்ள எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா கூட்டு பயிற்சி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக 2021 அக்டோபர் 15 முதல் 29 வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இரு நாடுகளாலும் இணைந்து நடத்தப்படும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சியாகும்.

17. ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் உறுப்பினர்கள் நியமனம்ு

tamil current affairs

தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்திற்கு’ கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைவர்: சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சிவகுமார்

துணைத் தலைவர்: புனிதப் பாண்டியன்

உறுப்பினர்கள்

1. வழக்கறிஞர் குமாரதேவன்

2. எழில் இளங்கோவன்

3. திருமதி லீலாவதி தனராஜ்

4. வழக்கறிஞர் பொ.இளஞ்செழியன்

5. முனைவர் கே.ரகுபதி

இந்த ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டு காலம் ஆகும். இந்த ஆணையம் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உரிய ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு அவ்வப்போது வழங்கும்.

Title of the document Title of the document