WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1. ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மக்தலீனா ஆண்டர்சன் பதவி விலகினார்


சுவீடன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை தழுவினார். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நிதி அமைச்சரான மக்டலெனாவை கட்சி தலைவராக தேர்வு செய்தனர்.அதன்பின்பு, அவரை பிரதமராக நியமிக்க நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த 349 உறுப்பினர்களில், மக்டலெனாவை பிரதமராக தேர்ந்தெடுக்க 117 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர், 174 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீதம் உள்ளவர்களில் 57 பேர் வாக்களிக்கவில்லை. மேலும் ஒரு எம்.பி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.ஸ்வீடன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், பிரதமர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க, அதிக உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை. ஆனால், ஒருவர் பிரதமராவதை எதிர்த்து 175 எம்பிக்கள் வாக்களித்தால், அவர் பதவி ஏற்க முடியாது. அதன்படி, மக்டலெனாவை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு எதிராக, பெரும்பான்மையை விட ஒரு வாக்கு குறைந்ததால், அவர் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார்.அதன்பின்பு, அவர் க்ரீன் கட்சியோடு சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் அவரின் பட்ஜெட் தோல்வியடைந்தது. எனவே கிரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

2. முதல்-அமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த விழாவில், 587.91 கோடி ரூபாய்க்கு முடிவுற்ற, 70 திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்புக்கு, 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின், 25 ஆயிரத்து, 123 பயனாளிகளுக்கு, 646.61 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் தலைமையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. 10 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ. 52,543 கோடி மதிப்பிலான பணிகள், திட்டங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு செயலர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத் தலைவர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சையது முஷ்டாக் அலி கோப்பை' கிரிக்கெட் - தமிழ்நாடு அணி வெற்றி

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடகா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தக்க வைத்தது தமிழ்நாடு அணி.தொடர்ந்து 2-வது முறையாகவும் இதுவரை 3 முறையும் முஷ்டாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4. இந்திய-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பு “எக்ஸ் சக்தி 2021” பிரான்சில் நடைபெறுகிறது.

இந்திய-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் ஆறாவது பதிப்பான “எக்ஸ் சக்தி 2021”, 15 நவம்பர் 2021 அன்று பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தொடங்கியது. மூன்று அதிகாரிகள், மூன்று இளநிலை அதிகாரிகள் மற்றும் 37 வீரர்கள் இந்திய தரப்பில் இருந்து பங்கேற்றுள்ளார்கள்.கூட்டுத் திட்டமிடல், செயல்பாடுகளின் பரஸ்பர புரிதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் கூட்டாகச் செயல்படுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு அம்சங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் இதுவரையிலான பயிற்சியின் போது கவனம் செலுத்துப்பட்டுள்ளது.

5. 1 மணி நேரம் 25 நிமிடங்கள்.. தற்காலிக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த கமலா ஹாரிஸ்...!!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.இதனையடுத்து ஜனாதிபதி பைடனுக்கு மயக்க மருந்து தந்து மருத்துவ சோதனை நடந்ததால் கமலாவுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது. 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கையில் கமலாஹாரிஸ் அமரவில்லை எனவும் தற்காலிக அமெரிக்க ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பணியை தொடங்கினார்.அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றார்.

6. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமனம்!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசனை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணையை ஆளுநரிடம் நேரில் பெற்றுக் கொண்டார் ஆர்.எம்.கதிரேசன். இவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம்.கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி தகவல்ு

உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா திகழ்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து நடப்பு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டாலராக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமமாகும். அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைனஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.

8. 580 ஆண்டுக்கு பிறகு நீண்ட சந்திர கிரகணம்

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் 19-ம் தேதி ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 11.32 மணி முதல் மாலை 5.34 மணிவரை, அதாவது 6 மணி 2 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடித்தது.இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தோன்றும்.

9. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிலம்பம்!

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை சேர்த்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, தற்போது நடைமுறையில் உள்ளது.இதன்படி, வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி, படகோட்டுதல் வீரர் லஷ்மண் ரோஹித் மரடாப்பா, தடகள வீரர்கள் தருண், தனலட்சுமி, சுபா, மாரியப்பன் ஆகியோருக்கு, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி ஆகிய விளையாட்டுகள் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய, இந்திய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

10. நாசா உலகின் முதல் DART மிஷனை அறிமுகப்படுத்தியது

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, வேண்டுமென்றே ஒரு விண்கலத்தை மோதி அதன் பாதையை மாற்ற DART என்ற முதல்-வகையான பணியை தொடங்கியுள்ளது. DART என்பது Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கம்.325 மில்லியன் டாலர் மதிப்பிலான DART பணியானது நவம்பர் 24, 2021 அன்று கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து SpaceX Falcon 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது.

11. சூடானின் பிரதமராக அப்தல்லா ஹம்டோக் மீண்டும் பதவியேற்றார்ு

சூடானின் நீக்கப்பட்ட பிரதம மந்திரி அப்தல்லா ஹம்டோக், தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பின்னர், ஹம்டோக் மற்றும் சூடான் ஆயுதப் படையின் பொதுத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் ஆகியோரால் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

12. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி- மூன் தனது சுயசரிதையான “Resolved: Uniting Nations in a Divided World” வெளியிட்டார்

‘Resolved: Uniting Nations in a Divided World’ என்ற புத்தகம் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூனின் சுயசரிதை ஆகும்.இந்த புத்தகம்,இவர் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் (UN) அவரது பதவி காலத்தில் சந்தித்த சவால்களை விவரிக்கிறது.இவர் ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொதுச் செயலாளராக இரண்டு 5 வருட காலத்திற்கு (2007-2016) பணியாற்றினார்.

13. எல் சால்வடார் உலகின் முதல் ‘பிட்காயின் நகரத்தை‘ உருவாக்க திட்டமிட்டுள்ளது

எல் சால்வடார் ஜனாதிபதி நயிப் புகேலே, உலகின் முதல் “பிட்காயின் சிட்டி”யை உருவாக்க நாடு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய நகரம் லா யூனியனின் கிழக்குப் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் ஆரம்பத்தில் பிட்காயின் ஆதரவு பத்திரங்கள் மூலம் நிதியளிக்கப்படும்.

14. ரஷ்யா ஏவப்பட்ட ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையான ‘சிர்கான்’ வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சோதனை இலக்கை சரியாக தாக்கிய போர்க்கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலில் இருந்து ‘சிர்கான்’ ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை ரஷ்ய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்தது.‘நுடோல்’ என்ற பெயரிடப்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்பு (ASAT) ஏவுகணையைப் பயன்படுத்தி ரஷ்யா தனது சொந்த செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதையில் அழித்தது, இது மற்ற சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்தையும் (ISS) அழிக்கக்கூடிய விண்வெளி குப்பைகளின் மேகத்தை உருவாக்க வழிவகுத்தது.

15. உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20

1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, ஐக்கிய நாடுகள் சபை, குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒன்றை கடைபிடிக்குமாறு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. 1959-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் செய்த நாள் மற்றும் 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ந்தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது. குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

16. விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

சர்ச்சைக்குரிய மூன்று விவசாயச் சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்று அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் வயல்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் பிறந்தநாள் நாட்டில் கொண்டாடப்படும் குருபுரப்/பிரகாஷ் உத்சவ் விழாவில் இந்த அறிவிப்பு வந்தது.இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Title of the document Title of the document