WELCOME TO EVA STALIN IAS ACADEMY

TNPSC Important Tamil Current Affairs


1. மணிப்பூரின் இரண்டு புகழ்பெற்ற தயாரிப்புகளான ஹத்தேய் மிளகாய் மற்றும் டேமெங்லாங் மாண்டரின் ஆரஞ்சுக்கு புவியியல் குறியீடு (GI) குறி வழங்கப்பட்டுள்ளது.


tnpsc tamil current affairs

மணிப்பூரின் சிரராகோங் மிளகாய் மற்றும் டாமெங்லாங் ஆரஞ்சு ஆகியவை GI குறியீட்டைப் பெறுகின்றன. இது மணிப்பூரில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். மணிப்பூரின் இரண்டு புகழ்பெற்ற தயாரிப்புகளான ஹத்தேய் மிளகாய் மற்றும் டேமெங்லாங் மாண்டரின் ஆரஞ்சு, மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் காணப்படுகிறது

2. சிக்கிம் அரசு ‘கட்லி‘ மீனை சிக்கிமின் மாநில மீனாக அறிவித்தது

tnpsc tamil current affairs

‘கூப்பர் மஹ்சீரை’ மீன் சிக்கிமில் ‘கட்லி’ என்று அழைக்கப்படுகிறது. ஹெக்ஸகோனோலெபிஸ் என்பது கூப்பர் மஹ்சீரின் அறிவியல் பெயர். இந்நிலையில் உள்ளூரில் ‘கட்லி’ என்று அழைக்கப்படும் ‘கூப்பர் மஹ்சீரை’ சிக்கிம் அரசு மாநில மீனாக அறிவித்துள்ளது. கட்லி என்பது நன்னீர் மீன்.சிக்கிம் மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதிகளில் காணப்படுகிறது மற்றும் இது முக்கியமாக டீஸ்டா மற்றும் ரங்கிட் ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளில் மட்டுமே உள்ளது.

3. பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றார்

tnpsc tamil current affairs

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தின் 16வது முதல்வராக தலித் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இவர் அம்ரீந்தர்சிங் அமைச்சரவையில் ஏற்கெனவே தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்: (CM)

இவர்தான் ஒரு மாநிலத்தின் உண்மையான தலைவர். இவரை நியமனம் செய்வது ஆளுநர் ஆவார்.ஷரத்து 164 படி மாநில ஆளுநர் அவர்களால் முதல் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம். மாநில சட்டமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் உறுப்பினராக கூடிய அனைத்து தகுதியும் உடையவரே மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவரின் சம்பளமானது ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து மாறுபடும். அமைச்சரவை குழுவில் முதலமைச்சரையும் சேர்த்து அவையின் மொத்த உறுப்பினர்களில் 15சதவீதத்திதற்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஆனால் முதலமைச்சர் உட்பட இதர அமைச்சர்களின் எண்ணிக்கை 12-க்கு குறையாமலும் இருக்க வேண்டும். இந்த ஏற்பாடு 2003-ஆம் ஆண்டு 91-வதுஅரசியலமைப்பு திருத்தம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத நபர் அமைச்சராக பதவி ஏற்றால் 6-மாதகாலத்திற்குள் உறுப்பினராக வேண்டும்

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

1. அமைச்சரவை மற்றும் ஆளுநரிடையே ஒரு பாலமாக முதல்வர் செயல்படுகிறார்.

2. அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பவர் முதலமைச்சர்.

3. முதல்வர் பரிந்துரைக்கும் நபர்களையே அமைச்சர்களாக ஆளுநர் நியமிக்கிறார்.

4. அமைச்சர்களுக்கான ஒவ்வொரு துறைகளையும் ஒதுக்கீடு செய்கிறார்.

5. ஒவ்வொரு அமைச்சரையும் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள துறையையும் மேற்பார்வையிடுகிறார்.

6. மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டுத்தொடரைக் கூட்டவோ அல்லது ஒத்தி வைக்கவோ ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

7. சட்டமன்றத்தைக் கலைத்திட ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

8. மாநில அரசுக் கொள்கைகளை வெளியிடுகிறார்.

9. மாநில திட்டக்குழுவின் தலைவர் முதலமைச்சர்.

10. உள் மாநிலக் குழு , தேசிய வளர்ச்சிக்குழு மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் உறுப்பினராக இருப்பார்.

4. பங்கஜ் அத்வானி 2021 ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றார்

tnpsc tamil current affairs

இந்தியாவின் பங்கஜ் அத்வானி 2021 ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை அமீர் சர்கோஷை தோற்கடித்து வென்றார். அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பட்டத்தை வென்றுள்ளார்.

5. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் பதவி ஏற்பு!

tnpsc tamil current affairs

நாகலாந்து மாநில ஆளுநராக இருந்த,பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார்

ஆளுநர்:(Governor)

இவர் மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக இருப்பவர். இந்திய குடியரசுத் தலைவர் விரும்பும்வரை இவர் பதவியில் இருக்கலாம். ஆளுநர் பதவிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 35 வயது. இவர் நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. இவரது பதவிக்காலம் பற்றி அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை, எனினும் 5 ஆண்டுகள் வரை இவர் பதவியில் இருக்கிறார்.

விதி 155 இன் படி இந்திய குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. ஒரு மாநிலத்தின் அமைச்சரவை அதன் பெரும்பான்மையை இழந்தால் சட்டசபையை கலைக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு ஆளுநர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான ஆளுநராக நியமிக்கப்படலாம். இவ்வாறு ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டால் அவரின் சம்பளம் அந்தந்த மாநிலங்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆளுநர் முக்கிய அரசியலமைப்பு விதிகள்:

விதி 153 - மாநில ஆளுநர்கள் பற்றியது .

விதி 176 - ஆளுநரால் நிகழ்த்தப்படும் சிறப்புரை.

விதி 213 - சட்டப்பேரவையில் கூடாத காலத்தில் அவசர ஆணைகளைப் பிறப்பிக்க ஆளுநருக்கு உள்ள அதிகாரம்.

விதி 161 - ஆளுநரின் குற்ற மன்னிப்பு (தண்டனைகளை குறைக்கவும், நீக்கவும்) வழங்கும் அதிகாரம்.

விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்.

விதி 163 - அமைச்சரவையானது ஆளுநருக்கு உதவியும் ஆலோசனையும் வழங்குதல் பற்றியது.

விதி 333 - மாநில சட்டப்பேரவைக்கு ஆங்கிலோ-இந்தியன் சமூகத்திலிருந்து ஒரு நபரை ஆளுநர் நியமிக்கிறார்.

6. சர்வதேச சிவப்பு பாண்டா தினம் 2021

tnpsc tamil current affairs

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச சிவப்பு பாண்டா தினம் அனுசரிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் சிவப்பு பாண்டாக்கள் வாழ போராடி வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சிவப்பு பாண்டா தினம் இந்த அழகான இனங்கள் பற்றி அறியவும், அவற்றின் வாழ்விடத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 18ம் தேதி சர்வதேச சிவப்பு பாண்டா தினம் கடை பிடிக்கபட்டது. உலகம் முழுவதும் உள்ள சிவப்பு பாண்டாக்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை என்றாலும், IUCN பட்டியலின் படி சுமார் 10,000 சிவப்பு பாண்டாக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சிவப்பு பாண்டாக்கள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது.

7. இந்தியாவின் 61 வது மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா மையம் நாகாலாந்தில் தொடங்கப்பட்டது

tnpsc tamil current affairs

தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நாகாலாந்தின் கோஹிமாவில் இந்தியாவின் 61 வது மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை (STPI) திறந்து வைத்தார்.

நாகாலாந்து

தலைநகரம்: கோஹிமா

முதல்வர்: Neiphiu Rio

கவர்னர்: ஜெகதீஷ் முகி

8. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய உறுப்பு நாடாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதுுு

tnpsc tamil current affairs

ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2001-ம்ஆண்டு அமைப்பு (எஸ்சிஓ) ஒன்றை நிறுவின. முன்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டன. தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 9 வது உறுப்பினர் ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முழு உறுப்பினராக ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. தஜிகிஸ்தானின் துஷான்பேவில் நடந்த SCO தலைவர்களின் 21 வது உச்சிமாநாட்டில் ஈரானை முழு உறுப்பினராக அனுமதிப்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. இதே அமைப்பில் சவுதி அரேபியா,எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் விவாத உறுப்பினர்களாக இணைக்க பட்டன

1. SCO தலைமையகம்: பெய்ஜிங், சீனா

2. SCO பொதுச் செயலாளர்: விளாடிமிர் நோரோவ்

3. SCO நிறுவப்பட்டது: 15 ஜூன் 2001:

4. SCO நிரந்தர உறுப்பினர்கள்: சீனா, ரஷ்யா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான்

9. சர்வதேச அமைதி தினம்: 21 செப்டம்பர்

tnpsc tamil current affairs

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது.சர்வதேச அமைதி தினத்திற்கான 2021 ஆம் ஆண்டின் கருப்பொருள் “ஒரு சமமான மற்றும் நிலையான உலகிற்கு சிறந்ததை மீட்டெடுப்பது” ஆகும்.

Title of the document Title of the document