WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1. 1.நகராட்சியில் இருந்து தாம்பரத்தை 20 வது மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் - அரசிதழ் வெளியீடு


தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 அவசர சட்டங்களை கடந்த அக்டோபர் 20-ந் தேதி வெளியிட்டார். அதில், 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், கடலூர், காஞ்சீபுரம், சிவகாசி மற்றும் கரூர் ஆகிய சிறப்பு நிலை நகராட்சிகளுடன், அவற்றில் அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.தற்போது சட்டசபை கூட்டத்தொடர் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இதற்கான அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இவை உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.தாம்பரம், கும்பகோணம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ளார். அதுதொடர்பான அரசிதழ் 3-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.அதில், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அவசர சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சேர்க்கப்பட்ட பகுதிகள் ஆகியவை தாம்பரம் மாநகராட்சிக்குள் இடம் பெறும்.

2. உபரி மின்சாரத்தை இந்திய மின் பரிமாற்ற சந்தையில் முதல் நாடாக நேபாளம் விற்பனை செய்ய உள்ளது

இந்தியா அனுமதி அளித்துள்ளதன்பேரில், உபரி மின்சாரத்தை இந்திய மின் பரிமாற்ற சந்தையில் முதல் நாடாக நேபாளம் விற்பனை செய்ய உள்ளது.

3. SpaceX இந்தியாவில் துணை நிறுவனத்தை அமைக்கிறதுு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX இந்தியாவில் உள்ளூர் பிராட்பேண்ட் செயல்பாடுகளைத் தொடங்க சொந்தமான துணை நிறுவனத்தை தொடங்கியுள்ளது.SpaceXஸின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க், 2022 டிசம்பரில் இருந்து இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைகளைத் தொடங்க உள்ளது.

4. 4. இந்தியாவின் விமானப்படையான IAF சர்வதேச போர் பயிற்சியான ‘ப்ளூ ஃபிளாக் 2021 இல் பங்கேற்றதுு

இஸ்ரேலின் ஓவ்டா ஏர்பேஸில் இந்திய விமானப் படை ப்ளூ ஃபிளாக் 2021 என்ற சர்வதேச பன்முகப் போர் பயிற்சியில் பங்கேற்றது.இதில் மொத்தம் 84 இந்திய விமானப்படை (IAF) வீரர்கள் பங்கேற்றனர்.ப்ளூ ஃபிளாக் 2021 இன் கருப்பொருள்: சிக்கலான செயல்பாட்டுக் காட்சிகளில் நான்காவது மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானங்களின் ஒருங்கிணைப்பு.

5. ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுசாய் காலமானார்ு

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அஹ்மத்சாய் தனது 77வது வயதில் ஆப்கானிஸ்தானின் காபூலில் காலமானார்.1996 தலிபான் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு 1995-1996 காலகட்டத்தில் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானியின் கீழ் அஹ்மத் ஷா அஹ்மத்சாய் ஆப்கானிஸ்தானின் பிரதமராக பணியாற்றினார்.

6. இந்திய அரசு அசோக் பூஷனை NCLAT தலைவராக நியமித்துள்ளது.

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) புதிய தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷனை நான்கு ஆண்டுகள் அல்லது அவர் 70 வயதை அடையும் வரை, எது ஆரம்பமோ அதை மத்திய அரசு நியமித்துள்ளது.இவர் கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர். நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 410 இன் கீழ் NCLAT அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

7. இந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகம் கொண்ட மாநிலம் கேரளா என்று பொது விவகாரக் குறியீடு

இந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகம் கொண்ட மாநிலம் கேரளா என்று பொது விவகாரக் குறியீடு (Public Affairs Index) அறிக்கை தெரிவித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான பொது விவகார மையத்தின் (PAC) பொது விவகாரக் குறியீட்டின் (PAI 2021) 6வது பதிப்பு அறிக்கையின்படி, முதல் மூன்று இடங்களை கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 18 இடங்கள் பிடித்துள்ளன.  தமிழ்நாடு இதில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மாநில அரசுகளின் ஆட்சி நிர்வாகம் மற்றும் நலத்திட்டங்களை கருத்திக்கொண்டு PAI தர குறியீடு வெளியிடப்படுவது வழக்கம். அதாவது பொது விவகாரக் குறியீடு (Public Affairs Index) என்ற தர மதிப்பீடு வெளியிடப்படும்.

8. கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளதுு

கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு, தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். இந்த அங்கீகாரம் பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருந்தது. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்த உலக சுகாதார அமைப்பு , பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கூடுதல் தரவுகளை கோரிவந்தது. இதன்படி, பாரத் பயோடெக் நிறுவனமும் கூடுதல் தரவுகளை அளித்து வந்தது.  இந்த நிலையில்,  கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

9. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக கே.இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.   நியமிக்கப்பட்டுள்ளாா்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்தவர் இளம்பகவத், அரசு பள்ளியில் இடையில் நின்ற மாணவர். தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.  படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. இவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய ரேங்க் 117 வது இடத்தைப் பிடித்தார். `

11.வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது. இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25 மனுக்குள் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தன.இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக மதுரை ஐகோர்ட்டு  தீர்ப்பு வழங்கியுள்ளது. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.

Title of the document Title of the document