WELCOME TO EVA STALIN IAS ACADEMY

Monthly TNPSC Tamil Current Affairs-2021


1. JIMEX 21(India-Japan Bilateral Maritime Exercise) இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு கடற்படைகளின் பயிற்சி


tnpsc tamil current affairs

ஐந்தாவது JIMEX,இந்தியா - ஜப்பான் கடல்சார் இருதரப்பு கடற்படைகளின் பயிற்சி, அரபிக்கடலில் 2021 அக்டோபர் 06 முதல் 08 வரை நடைபெறும். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. JIMEX இருதரப்பு கடற்படை பயிற்சிகள் ஜனவரி 2012 முதல் துவங்கின. JIMEX இன் கடைசி பதிப்பு செப்டம்பர் 2020 இல் நடத்தப்பட்டது. இந்த வருடம் நடக்கும் JIMEX-21 இரு கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் மேம்படுத்தி நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும்.

2. தேசிய சாலை பாதுகாப்பு வாரியம்: மத்திய அரசு அறிவிப்பு

tnpsc tamil current affairs

தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அதன் விதிமுறைகளுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. வாரியத்தின் அமைப்பு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதி, தேர்வு செயல்முறை, பதவிக்காலம், ராஜினாமா மற்றும் நீக்கத்திற்கான நடைமுறை, வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள், வாரிய கூட்டங்கள் போன்றவை குறித்த விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாரியத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகர் பகுதியில் இருக்க வேண்டும். இந்தியாவில் மற்ற இடங்களில் அலுவலகங்களை வாரியம் நிறுவலாம். மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய தலைவர் மற்றும் மூன்று பேருக்கு குறையாமல் ஏழு பேருக்கு மிகாமல் உறுப்பினர்கள் வாரியத்தில் இருக்க வேண்டும்.சாலை பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும்.

3. அக்டோபர் 4 முதல் 15 வரை இலங்கையில் இந்தியா-இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி ‘மித்ரா சக்தி’ நடத்தபடுகிறது

tnpsc tamil current affairs

அக்டோபர் 4 முதல் 15 வரை இலங்கையில் இந்தியா-இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி ‘மித்ரா சக்தி’ நடத்தபடுகிறது.இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான நெருக்கமான உறவை மேம்படுத்துவதோடு, இடையேயான செயல்பாட்டை மேம்படுத்துவதும், கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் இனி 'தனிப்பெருங்கருணை நாள்': முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

tnpsc tamil current affairs

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். "அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்.அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.

5. இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 மூவருக்குப் பகிர்ந்தளிப்பு

tnpsc tamil current affairs

2021ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்குப் புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் போன்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக ஜார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

6. மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021 அறிவிப்பு!

tnpsc tamil current affairs

2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றைத் தொடாமல் உணரக்கூடிய கருவி (சென்சார்) கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள், நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் அமைப்பு செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7. மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் பொதுத்தேர்தல்

tnpsc tamil current affairs

மன்னராட்சி நடைமுறையில் இருக்கும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடான கத்தாரும் ஒன்று. அரசை வழிநடத்துவதில் அந்த நாட்டின் மன்னருக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு கடந்த 1972-ம் ஆண்டு சட்டமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஷூரா என்று அழைக்கப்படும் நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த இந்த சபையின் 45 உறுப்பினர்களை ஆட்சி பொறுப்பில் இருக்கும் மன்னரே நேரடியாக நியமனம் செய்து வந்தார்.இந்த சூழலில் கடந்த 2003-ம் ஆண்டு கத்தாரின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டபோது ஷூரா சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து, 2004-ம் ஆண்டு ஷூரா சபைக்கான முதல் பொது தேர்தல் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.ஷூரா சபையின் 30 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மீதமுள்ள 15 உறுப்பினர்களை மன்னர் நியமிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால் பல்வேறு காரணங்களால் ஷூரா சபைக்கான தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, சபையின் 45 உறுப்பினர்களையும் மன்னரே நியமித்து வந்தார்.இந்த நிலையில் கத்தாரின் மன்னராக கடந்த 2013-ம் ஆண்டு பொறுப்பேற்ற ஷேக் தமிம் ஜனநாயக தன்மை, தொழிலாளர் உரிமை, பெண்கள் பிரதிநிதித்துவம் என பல தளங்களில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தார்.

இதற்கிடையில் கடந்த 2017-ம் ஆண்டு கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி அதன் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் காத்தாரின் மீது பொருளாதார தடைகளை விதித்தன. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க மன்னருக்கு அறிவுரை வழங்கும் ஷூரா சபையை மக்கள் மூலம் தேர்ந்தெடுக்க கோரிக்கை வலுத்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் ஷூரா சபையின் 49-வது ஆண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மன்னர் ஷேக் தமிம் 2021-ம் அக்டோபர் மாதம் ஷூரா சபைக்கான முதல் பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார்.அதோடு இந்த தேர்தலை வழிநடத்த சிறப்பு தேர்தல் குழு ஒன்றயைும் அவர் அறிவித்தார். இந்தநிலையில் மன்னர் ஷேக் தமிம் அறிவித்தபடி கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. 30 உறுப்பினர்களின் பதவிக்கு மொத்தம் 284 பேர் போட்டியினர். இதில் 254 பேர் ஆண்களே. வெறும் 30 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர்.

8. அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடுு

tnpsc tamil current affairs

மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் விளையும் புகழ்பெற்ற வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியில் வெள்ளை வெங்காயம் விளைகிறது. புகழ்பெற்ற இந்த வெங்காயம் மருத்துவ தன்மை கொண்டது. இது இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இன்சுலினை சுரக்கும் தன்மையும் கொண்டது. இந்நிலையில் வேளாண் துறையும், கொங்கன் வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு வழங்க கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல் விண்ணப்பம் சமர்பித்திருந்தது.

9. மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ‘மக்கள் பள்ளி திட்டம்’ - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

tnpsc tamil current affairs

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ‘மக்கள் பள்ளி’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவலால் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு ரூ.200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதே நேரம் கற்றல் குறைபாடுகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்க மக்கள் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தினமும் ஒன்றரை மணி நேரத்திற்கு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவாதிக்கப்பட உள்ளது. பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையில் இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட உள்ளது.மாவட்ட அளவிலான குழுவி்ல் மாவட்ட ஆட்சியர் முதன்மையானவராக இருப்பார். மேலும், PO-DRDA, CEO – DIET PRINCIPAL, DEO (1), HMs – 2/ Teachers -2, Self Help Group/ NYK, etc – 2., உள்ளிட்டோர் உறுப்பினர்களாக மாவட்ட குழுவில் செயல்படுவார்கள்.வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பஞ்சாயத்து குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. இதில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், சமூக அமைப்புகள், பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர் செயலர்களாக பணியாற்றுவார்கள். பள்ளி கல்வித்துறை, முதல் கட்டமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்த திட்டத்தை வரும் அக்டோபர் 18ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.அதன்படி வடக்கு மண்டலத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டம், மேற்கு மண்டலத்தில் கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டம், கிழக்கு மண்டலத்தில் கடலூா் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், தெற்கு மண்டலத்தில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Title of the document Title of the document