WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1.அரபிக்கடலில் உள்ள கொங்கன் கடற்கரையில் இந்தியா மற்றும் யுனைடெட் கிங்டம் (UK) ராணுவங்கள் இணைந்து முதல் முப்படைப் பயிற்சியான ‘கொங்கன் சக்தி 2021’ ல் ஈடுபட்டன


Eva Stalin ias academy

அக்டோபர் 24 முதல் 27, 2021 வரை அரபிக்கடலில் உள்ள கொங்கன் கடற்கரையில் இந்தியா மற்றும் யுனைடெட் கிங்டம் (UK) ராணுவங்கள் இணைந்து முதல் முப்படைப் பயிற்சியான ‘கொங்கன் சக்தி 2021’ ல் ஈடுபட்டன. கொங்கன் சக்தி 2021 பயிற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

2. ஐநா தினம்: ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்: அக்டோபர் 24

Eva Stalin ias academy

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட அக்டோபர் 24 ஆம் தேதி ஐநா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் அமைதி-பாதுகாப்பு தழைத்தோங்கவும், சர்வதேச பிரச்னைகளை சுமூகமாக கையாளவும், ஐக்கிய நாடுகள் சபை 1945-ஆம் ஆண்டு இதே நாளில் உருவாக்கப்பட்டது. பொதுச்சபை, பாதுகாப்பு மன்றம், பொருளாதார மற்றும் சமூக மன்றம், பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலர் அவை மற்றும் செயலகம் என ஆறு முக்கிய அங்கங்களுடன் ஐநா சபை நிறுவப்பட்டது. இந்த ஆறு அங்கங்களே சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளை தங்கள் கையிலெடுத்து தீர்வு கண்டு வருகின்றன.ஐநா அமைப்பின் முக்கிய மற்றும் நிரந்தர அமைப்பாக, பொதுச்சபை உள்ளது. முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள பொது சபைக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. பொது சபை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கூடி பன்னாட்டு பிரச்னைகளை அலசும். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 1953-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு நடவடிக்கைளை பலப்படுத்தவும் பாதுகாப்பு மன்றம் வழிவகுக்கிறது. 15 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டும் தடையில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளை, அதே பெயரில் இயங்கும் அமைப்பு கண்காணிக்கிறது. அறங்காவலர் அவை, உறுப்பு நாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துகிறது. உறுப்பு நாடுகளின் சர்வதேச பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை பன்னாட்டு நீதிமன்றம் செய்கிறது. நெதர்லாந்தில் பன்னாட்டு நீதிமன்றம் செயல்படுகிறது. நிர்வாகப் பணிகளை நிறைவேற்றும் பணியை ஐநா செயலகம் செய்கிறது.இன்னும் பல கிளை அமைப்புகளுடன் சர்வதேச நாடுகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. அத்தகைய பெருமைக்குரிய ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட தினமான அக்டோபர் 24-ஐ, 1948-ஆம் ஆண்டு முதல் ஐநா தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன

3. இந்திய காலாட்படை தினம் : அக்டோபர் 27

Eva Stalin ias academy

கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீரில் போர் நடைபெற்றது. அப்போது டெல்லியில் இருந்து சீக் ரெஜிமெண்ட் காலாட்படை சிரி நகரில் களமிறங்கி பழங்குடியின மக்களின் ஆதரவுடன் போராடி பாகிஸ்தான் படையை தோற்கடித்தது. அதில் உயிரிழந்த காலாட்படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் அந்த தினம், காலாட்படை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

4. உலக போலியோ தினம்: அக்டோபர் 24

Eva Stalin ias academy

போலியோமைலிடிஸ் என்பது மிகவும் தீவிரமான தொற்று வைரஸ் நோயாகும், இது பெரும்பாலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. அக்டோபர் 24ஆம் தேதி உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது, இந்த நோய்க்கு தமிழில் இளம்பிள்ளைவாதம் என்றுபெயர். போலியோ இல்லாத உலகத்தை நோக்கிய உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டும் நாளாக இந்த நாள் இருக்கிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போலியோ வைரஸை ஒழிப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்களின் பங்களிப்புகளையும் இந்த நாள் மதிக்கிறது. பொதுவாக போலியோ என அழைக்கப்படும் போலியோமைலிடிஸைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் 2014 பிப்ரவரி 11ம் தேதியே இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது.

5. இந்தியாவின் முதல் மாநில-வனவிலங்கு DNA சோதனை ஆய்வுக்கூடம் நாக்பூரில் திறக்கப்பட்டது

Eva Stalin ias academy

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிராந்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் (RFSL) இந்தியாவின் 1வது மாநில அரசுக்கு சொந்தமான வனவிலங்கு DNAசோதனை பகுப்பாய்வு ஆய்வகத்தை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்.

6. காவலர் வீரவணக்க நாள் : அக்டோபர் 21

Eva Stalin ias academy

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் (POLICE COMMEMORATION DAY) கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

7. சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்

Eva Stalin ias academy

சமூக நீதிக் கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும். சுப. வீரபாண்டியன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது, தென்கொரியா

Eva Stalin ias academy

தென் கொரியாவில் முதன்முதலாக உள்நாட்டில் நூரி என்ற ராக்கெட்டை அங்குள்ள கொரியா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் உருவாக்கினர். இந்த ராக்கெட் 47 மீட்டர் (154 அடி) நீளம் கொண்டது. இந்த ராக்கெட் 1.6 பில்லியன் டாலர் மதிப்பில் (சுமார் ரூ.12 ஆயிரம் கோடி) உருவாக்கப்பட்டடது. இந்த ராக்கெட், சியோலில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கோஹுங் என்ற இடத்தில் உள்ள நாரோ விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது தனது சொந்த தொழில் நுட்பத்தில் விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பும் 10-வது நாடாக தென் கொரியா மாறியது.

தென்கொரிய அதிகாரிகள் கூறும்போது, “நாட்டின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்த ராக்கெட் திறன் மிக முக்கியமானதாக இருக்கும். இதில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்களையும், ராணுவ உளவு செயற்கைக்கோள்களையும் அனுப்பும் திட்டங்களும் அடங்கும். 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என்றும் தென்கொரியா இலக்கு வைத்துள்ளது” என தெரிவித்தனர். அடுத்த ஆண்டு மே மாதம் மற்றொரு ராக்கெட்டையும் விண்ணில் ஏவி சோதிக்க தென்கொரியா முடிவு செய்துள்ளது. தென்கொரியா கடைசியாக 2013-ம் ஆண்டு ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் இது ரஷிய தொழில் நுட்பத்தில் உருவானது ஆகும்.

9. விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காகவும் சீர் செய்வதற்காகவும் புதிய செயற்கைக் கோள் ஒன்றை சீனா விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

Eva Stalin ias academy

விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காகவும் சீர் செய்வதற்காகவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ள சீனா அதை சோதிப்பதற்காக செயற்கைக் கோள் ஒன்றை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங்கிலிருந்து ஷிஜியான் - 21 என்ற செயற்கைக் கோள் லாங் மார்ச் - 3 B என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. விண்வெளிக் குப்பைகளை அகற்றவும் அவற்றின் பாதையை சீர்செய்யவும் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை இந்த செயற்கைக் கோள் மூலம் சீனா சோதித்து பார்க்க உள்ளது.

10. DRDO அபியாஸ் விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது.

Eva Stalin ias academy

ஒடிசாவில் வங்காள விரிகுடாவில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பிலிருந்து (ஐடிஆர்) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக விரிவாக்க ஏரியல் இலக்கு (ஹீட்), இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது என்று டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். விமான சோதனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) அதன் ஐடிஆர், பாலசூருக்கு அருகிலுள்ள சந்திப்பூரில் நடத்தப்பட்டது. பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான வான்வழி இலக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படலாம். ABHYAS ஆனது DRDO வின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் (ADE), பெங்களூருவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

11. ஃபிஃபா தரவரிசை 2021: இந்தியா 106 வது இடத்தில் உள்ளது

tamil current affairs

ஃபிஃபா (ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி கால்பந்து அசோசியேஷன்) தரவரிசை 2021 இல் இந்தியா தற்போது 106 வது இடத்தில் உள்ளது. . சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியின் SAFF (தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு) சாம்பியன்ஷிப் 2021 இல் வெற்றி பெற்ற பிறகு, தர வரிசையில் 106 வது இடத்தைப் பிடித்துள்ளது.இந்திய அணி SAFF (தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு) சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை தோற்கடித்தது. ஃபிஃபா தரவரிசையில், பெல்ஜியம் முதல் இடத்தில் உள்ளது. பிரேசில் 2வது இடத்தையும், பிரான்ஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

12. ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது

tamil current affairs

ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இந்திய திரைத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிப்பு நல்கிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.சிவாஜி கணேசன், இயக்குனர் பாலச்சந்தர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த விருதை பெற்றுள்ளனர். தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும். அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

13. பார்படோஸ் நாடு தனது முதல் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தது

tamil current affairs

பார்படோஸ் இங்கிலாந்தின் ராணி எலிசபெத்தை நீக்கி அதன் முதல் ஜனாதிபதியைத் தேர்ந்தேடுத்தது. பார்படோஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றிய மற்றும் தற்போது 2018 முதல் கவர்னர் ஜெனரலாக உள்ள முதல் பெண், டேம் சாண்ட்ரா அவர்கள் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். 72 வயதான டேம் சாண்ட்ரா மேசன் பிரிட்டனில் இருந்து நாட்டின் சுதந்திரத்தின் 55 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நவம்பர் 30 அன்று பதவியேற்க உள்ளார்

14. இந்தியாவின் நாடகத் திரைப்படமான கூழாங்கல் ஆஸ்கார் 2022க்கான அதிகாரப்பூர்வ நுழைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

tamil current affairs

தமிழ் மொழி நாடகத் திரைப்படமான கூழாங்கல் (சர்வதேச அளவில் பெபிள்ஸ் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது), 94வது அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கார் விருதுகள் 2022) இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குனர் வினோத்ராஜ் பிஎஸ் இயக்கியுள்ளார் மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்துள்ளனர். 94வது அகாடமி விருதுகள் மார்ச் 27, 2022 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

15. FATF க்ரெ (Grey) பட்டியலில் பாகிஸ்தானுடன் துருக்கி இணைந்துள்ளது

tamil current affairs

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு, எஃப்.ஏ.டி.எஃப் என்ற சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, சட்டவிரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் அதிகம் நடைபெறுகிறது என்பதை கண்காணித்து, அந்த நிதியுதவிகளை தடுப்பதற்கான கட்டளையை இந்த அமைப்பு பிறப்பிக்கும். அந்த கட்டளையை நிறைவேற்றும் வரை, சம்பந்தப்பட்ட நாடுகளை 'கிரே பட்டியல்' என்றழைக்கப்படும் மோசமான பட்டியலில் வைத்திருக்கும். இதனால், அந்நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரே பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இருந்து நீக்க இந்தியாவால் தேடப்படும் ஜெயஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆகியோருக்கு நிதியுதவி தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான 30 வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பட்டியலிட்டு இருந்தது. அதில் 26 நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாத காரணத்தினால், தொடர்ந்து மோசமான நாடுகளின் பட்டியலிலேயே நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (FATF) பாகிஸ்தானை அதன் ‘க்ரெ (Grey) பட்டியலில்’ வைத்திருக்கிறது.இப்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானுடன் மூன்று புதிய நாடுகளான துருக்கி, ஜோர்டான் மற்றும் மாலி ஆகியவை க்ரெ (Grey) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன

16. சர்வதேச பனிச்சிறுத்தை தினம்: அக்டோபர் 23

tamil current affairs

2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23ஆம் தேதி சர்வதேச பனிச்சிறுத்தை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அக்டோபர் 23, 2013 அன்று, 12 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி ‘பனிச்சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான பிஷ்கெக் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

17. அலெக்ஸி நவால்னி ஐரோப்பிய ஒன்றியத்தின் சாகரோவ் பரிசை வென்றார்

tamil current affairs

சிறைச்சாலையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறந்த மனித உரிமைகள்,சிந்தனை சுதந்திரத்திற்கான 2021 க்கான சாகரோவ் பரிசு ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கியுள்ளது.விளாடிமிர் புடினின் ஆட்சியின் ஊழலுக்கு எதிராக அயராது போராடும் அவரது அபாரமான தனிப்பட்ட துணிச்சலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

18. ஈக்வடாரில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவசரகால நிலையை அறிவித்துள்ளது

tamil current affairs

ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ வன்முறை போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருவதால், தென் அமெரிக்க நாட்டில் 60 நாள் அவசர நிலையை அறிவித்துள்ளார். அவசர நடவடிக்கைகளின் கீழ், ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து “ஆயுத சோதனைகள், சோதனைகள், 24 மணி நேர ரோந்து மற்றும் போதைப்பொருள் தேடுதல் போன்ற செயல்களைச் செய்வார்கள்.

Title of the document Title of the document