WELCOME TO EVA STALIN IAS ACADEMY

July Weekly TNPSC Tamil Current Affairs


ஏர் இந்தியாவுக்கு புதிய அதிகாரி: உள்துறை அமைச்சகம் அனுமதி


tnpsc tamil current affairs

ஏர் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, கேம்பல் வில்சனை நியமிக்க, உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.இதையடுத்து, வில்சன் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.சிவில் விமான போக்குவரத்து விதிகளின்படி, வெளிநாட்டினர் உட்பட, விமான நிறுவனங்களில் முக்கியமான பணியாளர்களை நியமிக்க, உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கட்டாயமாகும். ஏர் இந்தியாவை கையகப்படுத்திய சில வாரங்களிலேயே, பிப்ரவரி 14ம் தேதியன்று, 'துருக்கி ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசியை இப்பதவிக்கு அறிவித்தது, டாடா சன்ஸ்.
ஆனால், அவரது நியமனம் குறித்து வேறு பல கருத்துகள் எழுந்ததை அடுத்து, ஏப்ரல் 1ல், தான் பதவி ஏற்க விரும்பவில்லை என அறிவித்துவிட்டார், இல்கர் ஐசி.இதையடுத்து, வில்சனை தேர்வு செய்தது டாடா நிறுவனம்.
 

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தேதி அறிவிப்பு


tnpsc tamil current affairs

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு (2021) நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த போட்டி நடைபெறும் தேதியை உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனே பதவியேற்பு


tnpsc tamil current affairs

அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு சென்ற நிலையில், பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாகவே மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, ரணில் விக்கரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜூலை 21 அன்று  à®ªà®¤à®µà®¿à®¯à¯‡à®±à¯à®±à®¾à®°à¯. இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில் ஜூலை 22  à®…ன்று  à®…திபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் தினேஷ் குணவர்த்தனே பிரதமராக பதவியேற்றார். தினேஷ் குணவர்த்தனே மூத்த அரசியல்வாதியாவார். இலங்கையில் 22 ஆண்டுகளாக கேபினட் அமைச்சராகப் பதவி வகித்தவர். அண்மையில் கோத்தபாய ராஜபக்சேவால் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர். குறிப்பாக கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருங்கியவர்.

Title of the document Title of the document