WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1.சென்னையில் ரூ.4 கோடி செலவில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அனுமதி


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் உருமாற்றத்தை கண்டறிய, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் உள்ள ‘இன்ஸ்டெம்’, ஐதராபாத்தில் உள்ள சி.டி.ஐ.டி மற்றும் புனேவில் உள்ள என்.ஐ.வி ஆகிய மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தன.இந்தநிலையில் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில்,தற்போது அதற்குரிய அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதன் அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தை பெருமளவு தடுத்திட முடியும்.

2. இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் இந்த கவுன்சில் கவனித்து வருகிறது. இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி, நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவுக்கான இந்திய தூதராக 3 ஆண்டுகள் பணியாற்றிய இவர், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்பெயின் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் விக்ரம் மிஸ்ரி பணியாற்றியுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராகவும் விக்ரம் மிஸ்ரி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல்: தமிழ்நாடு 2-வது இடம்

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை 3 கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 4-ம் கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் பெரிய மாநிலங்களுக்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2- வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளாவுக்கு மொத்தம் 82.20 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19, 2019-20 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

4. நல்லாட்சி தினம் - டிசம்பர் 25

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அறிவித்துள்ளபடி, அவரது பிறந்தநாளான இன்று (டிசம்பர் 25) நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.முன்னாள் பிரதமரான மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee) 1924ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி பிறந்தார். இவர், 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். அவரது ஆட்சியை கொண்டாடும் வகையில், இன்றை நாள் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.1996 தேர்தலில் அதிக இடங்களை பெற்றதால் 11 நாள் பிரதமர். பின் 1998 தேர்தலில் வென்று 11 மாதங்கள் பிரதமர்.இந்த நேரத்தில் தான் கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவை அணு ஆய்த நாடாக வெளியே காட்டியவர்.1999 தேர்தலில் வென்று முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார், இந்த காலத்தில் தான் தங்க நாற்கரச்சாலை மூலம் இந்தியா முழுவதும் இணைப்பு ஆரம்பமானது. அப்துல்கலாமை இந்தியாவின் குடியரசுத்தலைவராக்கியவர்.

5.தென்னப்பிரிக்கா ஐகோர்ட்டின் நீதிபதியாக இந்திய வம்சாவளி நரேந்திரன் ஜோடி கோலப்பன் நியமனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை தென்னாப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக அந்நாட்டின் ஜனாதிபதி நியமித்துள்ளார்.தென்னாப்பிரிகாவின் மிக உயர்ந்த நீதித்துறையாக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியரான நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். நீதித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ளனர். 64 வயதான நரேந்திரன் ஜோடி கோலப்பன் மற்றும் ராம்மகா ஸ்டீவன் மாதப்போ ஆகியோர் அரசியலமைப்பு ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறையில் நீண்ட நெடும் அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் ஜனவரி 1- ந்தேதியன்று பொறுப்பேற்க உள்ளனர்.1982ம் ஆண்டு நீதித்துறையில் பணியாற்றி வரும் இவர் பொதுப்பணியில் ஈடுபாடு கொண்டவர். அவர் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பில் 1993ம் ஆண்டு இணைந்தார். பின் அந்த அமைப்பின் இயக்குநராக உயர்ந்தார்.1997ம் ஆண்டு தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளராக பொறுப்பேற்றார்.பின்னர், 2016ம் ஆண்டு அவர் தென்னாப்பிரிக்க சட்ட சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.அவர் மனித உரிமைகளுக்கான அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

6. விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் - ஹிமாசல பிரதேசம் சாம்பியன்

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் கோப்பைக்காக இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- இமாச்சலப்பிரதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இமாச்சலப்பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ்நாடு 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்களை குவித்தது. இமாச்சல் அணியில் பங்கஜ் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.போதுமான வெளிச்சமின்மை காரணமாக வி.ஜே.டி விதிமுறை பின்பற்றப்பட்ட நிலையில் இமாச்சல் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.இதையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இமாச்சல் அணியின் தொடக்க வீரரான சுப்மன் அரோரா 136 ரன்கள் குவித்தார். ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த போது, போதுமான வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் 47.3 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. அப்போது இமாச்சல் அணி 299 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து வி.ஜே.டி விதிமுறை பின்பற்றப்பட்டது. இதில் இமாச்சல பிரதேச அணி முன்னிலை வகித்ததால், அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இமாச்சல் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் குவித்த சுப்மன் அரோரா ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டார்.

7. அதிபருடன் கருத்து வேறுபாடு சோமாலியா பிரதமர் முகமது உசேன் ரோபல் பதவி நீக்கம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் முகமது பர்மாஜோ. இவரின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார்.இந்த விவகாரத்தில் அவருக்கும் பிரதமர் முகமது உசேன் ரோபலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக அங்கு கடந்த மாதம் நடக்க இருந்த பொதுத்தேர்தல் தள்ளிப்போனது.இதனால் அங்கு அரசியல் குளறுபடி உருவான சூழலில் பிரதமர் ரோபல், கடற்படைக்கு சொந்தமான நிலத்தை தனது தனிப்பட்ட நலனுக்காக அபகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ரோபல் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறார்.இந்த நிலையில் பிரதமர் ரோபல் மீதான ஊழல் குற்றச்சாட்டை காரணம் காட்டி அதிபர் பர்மாஜோ நேற்று அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

8. தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவு

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 90.1984ஆம் ஆண்டு டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் மனிதத்திற்கான ஆல்பர்ட் சுவைட்சர் பரிசையும் 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார். 2009ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Title of the document Title of the document