WELCOME TO EVA STALIN IAS ACADEMY

September TNPSC Tamil Current Affairs


1. துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமர்


tnpsc tamil current affairs

துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக ரவுதா பவுடன்ட் ரமதானே, 63, என்ற பொறியியல் கல்லுாரி பேராசிரியை அறிவிக்கப்பட்டு உள்ளார். வடக்கு ஆப்ரிக்க நாடான துனிசியாவின் புதிய பிரதமராக ரவுதா பவுடன்ட் ரமதானே என்பவரை, அந்நாட்டு அதிபர் கைஸ் சயித் நேற்று அறிவித்தார்.ரவுதா பவுடன்ட் அங்குள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லுாரி பேராசிரியை என்பதுடன், அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

tnpsc tamil current affairs

ஜப்பானின் பிரதமராக சுகா பொறுப்பு வகித்து வந்தார். கொரோனாவை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் பதவி விலகினார்.இந்த நிலையில் ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை இன்று நடத்தியது. இதில் தாரோ கோனோ, புமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான புமியோ கிஷிடா வெற்றிபெற்றார். அவர் ஜப்பானின் புதிய பிரதமர் ஆகிறார்.

3. உலக இதய தினம்: செப்டம்பர் 29

tnpsc tamil current affairs

உலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குவதிலும், கழிவுப் பொருட்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது இதயம்.

4. 10 ஆண்டுக்குப் பிறகு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

tnpsc tamil current affairs

‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்களைவும் அவர் தொடங்கினார். பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட 17 பிரிவுகளை உள்ளடக்கிய திட்டமாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் திகழும் என தெரிவிக்கப்பட்டது. இந்த “வரும்முன் காப்போம்” திட்டம் முதன் முதலில் கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அப்போதைய முதல் அமைச்சர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16 சிறப்புத் துறை மருத்துவருடன் கூடிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டுக்கு 1,240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

tnpsc tamil current affairs

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டு உள்ளார். காவிரி நதி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.அதன்படி, அக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 2018-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த 3 ஆண்டுகளில் அதற்கென தனிப்பட்ட தலைவர் (முழுநேர தலைவர்) நியமிக்கப்படவில்லை. மத்திய நீர்வள ஆணைய தலைவரே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய நீர்வள ஆணைய தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தார் என்ற எஸ்.கே.ஹல்தார் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு, மத்திய மந்திரி சபையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழுநேர தலைவரின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை செல்லுபடி ஆகும். எஸ்.கே.ஹல்தாரின் பணிக்காலம் வருகிற நவம்பர் 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இருப்பினும் அதன்பிறகு அவர் ஒப்பந்த முறையில் முழுநேர தலைவராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6. உலக சுற்று சூழல் சுகாதார தினம் : செப்டம்பர் 29

tnpsc tamil current affairs

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘உலகளாவிய மீட்பில் ஆரோக்கியமான சமூகங்களுக்கு சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல்’ ஆகும். தற்போதைய சூழ்நிலையில் நாள் முக்கியமானது, ஏனெனில் உலகின் பெரும்பாலான பகுதிகள் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழ்நிலையிலிருந்து மீண்டு வருகின்றன. இதுபோன்ற சமயங்களில், சுற்றுச்சூழல் சுகாதாரப் பணியாளர்களின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாள் 2011 இல் இந்தோனேஷியாவில் நடந்த கூட்டத்தின் போது சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார கவுன்சிலால் தொடங்கப்பட்டது.

7. தமிழகத்தின் இரண்டாவது போலீஸ் அருங்காட்சியகம் எழும்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

tnpsc tamil current affairs

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழைமையான கட்டிடத்தில் பழைய காவல் ஆணையா் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் எழும்பூரில் காவல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பழமையான கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

8. உலக சுற்றுலா தினம்: செப்டம்பர் 27

tnpsc tamil current affairs

சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

9. ஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார்.ை

tnpsc tamil current affairs

ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைச் சேர்த்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள சிக்கல்களை சரி செய்வது தொடர்பாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் இருக்கக்கூடிய சிக்கல்களை சீர் செய்வதற்கும் இந்தக் குழு முயற்சிகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. கரையை கடந்த குலாப் புயல்

tnpsc tamil current affairs

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இக்காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவானது. இப்புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. பாகிஸ்தான் இந்த பெயரை பரிந்துரைத்திருந்தது. பொதுவாக செப்டம்பர் மாதங்களில் வங்க கடலில் புயல்கள் உருவாவது இல்லை. 2018-ல் டாயி என்ற மற்றொரு புயல் வங்கக் கடலில் உருவானது. இந்த நிலையில் குலாப் புயல் உருவானது.

11. தமிழகத்தில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க ஒப்பந்தம்.

tnpsc tamil current affairs

சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், கடந்த 1988ஆம் ஆண்டு ஒரு குறுந்தொழில் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, படிப்படியாக வளர்ந்து சிறு நிறுவனமாகவும் தற்போது நடுத்தர நிறுவனமாக உயர்ந்துள்ளது. இது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு உயர் துல்லியம் மற்றும் உயர்தர பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் போயிங் இடையேயான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழகப் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும்.

12.உலக நதி தினம்:செப்டம்பர் 26

tnpsc tamil current affairs

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை, உலக நதி தினம் நீர்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 26 அன்று விழுகிறது. இன்று, பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக ஆறுகள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றன. உலக நதிகள் தினத்தின்படி, “இந்த நாள் உலகின் நீர்வழிகளின் கொண்டாட்டமாகும். இது ஆறுகளின் பல மதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது மற்றும் பொது விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சிக்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆறுகளின் மேம்பட்ட பொறுப்பை ஊக்குவிக்கிறது.

Title of the document Title of the document