WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1. 12வது தேசிய உறுப்புதான தினம்” (National Organ Donation Day) - நவம்பர் 27


இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று ‘தேசிய உறுப்பு தான தினம்’ அனுசரிக்கப்படுகிறது.2021 ஆண்டு 12வது தேசிய உடல் உறுப்பு தான தினத்தைக் குறிக்கிறது. இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.

2. கூழாங்கல் சினிமா ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

94-வது அகாடெமி விருதுகள் (ஆஸ்கார்) அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.இந்நிலையில் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் 2022ம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது. ஆனால், ஆஸ்கார் விருதுக்கான தேர்வுக் குழுவால் அந்த திரைப்படம் இறுதி பட்டியலுக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதுவரை “மதர் இந்தியா, சலாம் பம்பாய் மற்றும் லகான்” ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை.

3. அரசியலமைப்பு தினம் (Constitution Day) - நவம்பர் 26

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சபை 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்த அரசியலமைப்பு 1950 ஜனவரி 26-ம் தேதி செயல்பட்டிற்கு வந்தது.இதனை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 26-ம் தேதி ‘இந்திய அரசியலமைப்பு தினம்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். சுவாரஸ்யமாக அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது, சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க (ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது. பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட 2 ஆவண பிரதிகள் இருந்தன. அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.

4. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸுக்கு பெயர் ஓமைக்ரான் : உலக சுகாதார அமைப்பு

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதியவகை பி.1.1.529 கரோனா வைரஸுக்கு உலக சுகதாார அமைப்பு “ஓமைக்ரான்” என்று பெயரிட்டுள்ளது.இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப்போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

5. நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்

நாட்டில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களைக் கொண்டு நிதி ஆயோக் ஆய்வு செய்து 'பல பரிமாண வறுமை குறியீடு' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடந்து மத்திய பிரதேசம் (36.65 சதவீதம்) 4-வது இடத்திலும், மேகாலயா (32.67 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன.கேரளா (0.71 சதவிகிதம்), கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), தமிழ்நாடு (4.89 சதவிகிதம்) மற்றும் பஞ்சாப் (5.59 சதவிகிதம்) ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் வறுமை இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.

6. உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் - மணிப்பூர் நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ரயில் போக்குவரத்து போதுமான அளவில் இல்லை.இந்த மாநிலங்களின் தலைநகரங்களை ரயில் போக்குவரத்து வாயிலாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மணிப்பூர் மாநில தலைநகர்- இம்பால் மற்றும் ஜிராபம் நகரங்களுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது.இதற்காக, நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே 141 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்ற பெருமையையும் அடைய உள்ளது. தற்போது, தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன்ஸ் என்ற நாட்டில் 139 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் தான், உலக அளவில் மிக உயரமான ரயில்வேபாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

7. இன்டா்போல் அமைப்பின் தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த அகமது நாசா் அல்-ரயிசி தேர்வு. அது போல இன்டர்போல்’ ஆசிய பிரதிநிதி ஆனார் சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்ஹா

சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு, கடந்த 1923 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் ’இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வெய் இருந்து வந்தார். இவர் பதவிக் காலம் 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சீனா சென்ற அவர், திரும்பி வரவில்லை. ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், சுமாா் 190 நாடுகளின் காவல் துறைகளை ஒருங்கிணைக்கும் இன்டர்போல் அமைப்பின் 89-வது வருடாந்திர கூட்டம் துருக்கியின் இன்ஸ்தான்புல் நகரில் நடந்தது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த சா்ச்சைக்குரிய காவல்துறை தலைவா் அகமது நாசா் அல்-ரைசி (Ahmed Naser Al-Raisi) இன்டா்போல் அமைப்பின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.இந்தக் கூட்டத்தில் ஆசிய நாடுகள் பிரதிநிதிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில், சீனா, சிங்கப்பூா், கொரியா, ஜோா்டன் நாடுகளில் இருந்தும் போட்டியிட்டனா். இந்த போட்டியில், இந்தியாவின் சாா்பில் போட்டியிட்ட, சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8. இந்தியாவின் தேசிய பால் தினம்: 26 நவம்பர் 2021 அன்று தேசிய பால் தினமாக கொண்டாடப்பட்டது

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் “இந்தியாவின் பால்காரர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

Title of the document Title of the document