WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1. தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


Eva Stalin ias academy

“1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் அறிவித்தார்.

2. போப் ஆண்டவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

Eva Stalin ias academy

இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில் பிரதமர் மோடி அங்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பிரதமர் மோடி பயணத்தின் முக்கிய நோக்கம், பொருளாதாரத்தில் பெரிய நாடுகளாக திகழ்கிற ‘ஜி-20’ நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதும், இந்த மாநாட்டின் மத்தியில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்து அவர்களுடன் இரு தரப்பு பேச்சு நடத்துவதும் ஆகும்.இதற்கு மத்தியில் பிரதமர் மோடி, உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ்சையும், வாடிகன் நகருக்கு சென்று சந்தித்தார்.போப் ஆண்டவரின் மாளிகையான அப்போஸ்தலிக் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கை குலுக்கியும், கட்டித்தழுவியும் அன்புடன் வரவேற்றார்.போப் ஆண்டவர் பிரான்சிஸ் 2013-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து இந்திய பிரதமர் யாரும் அவரை சென்று சந்தித்ததில்லை. அது மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளாக எந்த போப் ஆண்டவரையும் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்து கிடையாது.கடைசியாக 2000-ம் ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வாடிகன் சென்று போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பாலை சந்தித்தார்.அதன் பின்னர் 21 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை பிரதமர் மோடி நேற்று சந்தித்தது முக்கியத்துவம் பெற்றது.இந்த சந்திப்பின்போது இருவரும் பருவநிலை மாற்றத்தால் எழுந்துள்ள சவால்கள், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, வறுமை ஒழிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.போப் ஆண்டவரை விரைவில் இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.கடைசியாக போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால்தான், வாஜ்பாய் ஆட்சியின்போது 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். இப்போது மோடியின் ஆட்சியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு

Eva Stalin ias academy

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சக்தி காந்த தாஸ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1980 ஆம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வாகி தமிழ்நாடு கேடர் அதிகாரியாக பணியாற்றியவர்.மத்திய அரசுப் பணிகளுக்கு செல்லும் முன், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எனப் பதவி வகித்தவர். மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலாளராகவும் பணியாற்றிய இவர், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் மூன்று ஆண்டுகள் அவர் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. 10.12.2021-ல் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, அவரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்க, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

4. ஜி20 தலைவர்களின் 15வது உச்சிமாநாடு

Eva Stalin ias academy

உலகின் பெரிய பொருளாதார நாடுகளான ரஷியா, இத்தாலி, இந்தியா, சீனா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ‘ஜி-20’ அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகரான ரோம் நகரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின், ‘உலக பொருளாதாரம், உலக சுகாதாரம்’ என்ற அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்த வலுவான செய்தியை சுட்டிக்காட்டும் வகையில் ’ரோம் பிரகடனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5. இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Eva Stalin ias academy

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவாக இது செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குழு முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி & சமூக பாதுகாப்பிற்கு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை & இலங்கைக்கு விரும்பி செல்லுதல் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றம்

Eva Stalin ias academy

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மெட்டா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. தேசிய உள் கட்டமைப்பு மேம்பட்டு வங்கி (National Bank for Financing Infrastructure and Development (NaBFID))முதல் தலைவராக k v காமத் நியமனம்

Eva Stalin ias academy

நிதி அமைச்சகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய உள் கட்டமைப்பு மேம்பட்டு வங்கி (National Bank for Financing Infrastructure and Development (NaBFID))முதல் தலைவராக மூத்த வங்கியாளர் k v காமத் அவர்களை நியமித்தது.

8. 18-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

Eva Stalin ias academy

ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் 18-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. ஆசியான் கூட்டமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்டவை இக்கூட்டமைப்பில் நட்பு நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' சார்பில் 18-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

9. கனடா நாட்டு பாதுகாப்பு அமைச்சராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த் நியமனம்

Eva Stalin ias academy

கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து அவர் மீண்டும் பிரதமரானார். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட 54 வயதான அனிதா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வழக்கறிஞரான அனிதா ஆனந்த், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள் ஆவர்.பாதுகாப்புத்துறை அமைச்சராவதற்கு முன்பு அனிதா ஆனந்த், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

Title of the document Title of the document