WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1. உலகின் முதல் கரோனா மாத்திரை(”மால்னுபிராவிர்” molnupiravir) : பிரிட்டன் அரசு அனுமதி


உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த மாத்திரை பிரிட்டனில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மாத்திரையை அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

2. மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் இங்கிலாந்து 5 பவுண்ட் நாணயத்தை வெளியிட்டது.ு

பிரிட்டன் அரசு தீபாவளி கொண்டாட்ட நாளில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் மரபுகளை போற்றும் வகையில், 5-பவுண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக், மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ நாணயத்தில் மகாத்மா காந்தி நினைவு கூறப்படுவது இதுவே முதல் முறை.

3. Google தாய் நிறுவனமான Alphabet Inc. லண்டனில் Isomorphic Labs என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளதுுு

Google தாய் நிறுவனமான Alphabet Inc. லண்டனில் Isomorphic Labs என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது.மனிதகுலத்தின் அழிவுக்கு காரணமான சில நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு AI (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.டெமிஸ் ஹசாபிஸ் ஐசோமார்பிக் லேப்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார்.

4. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: நவம்பர் 

புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, நாடு முழுவதும் ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹம்சவர்தனால் அறிவிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ‘உலக புற்றுநோய் தினம்' பிப்ரவரி 4-ல் அனுசரிக்கப்படுகிறது. கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமே இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது.

5. சர்வதேச சோலார் கூட்டணியின் 101வது உறுப்பு நாடாக அமெரிக்கா இணைந்ததுு

சூரிய சக்தியை உலகளாவிய முறையில் ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்காக இந்தியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய சர்வதேச சூரியக் கூட்டணியின் (ISA) 101வது உறுப்பினராக அமெரிக்கா சேர்ந்தது.காலநிலைக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி, கிளாஸ்கோவில் நடந்த COP26 இல், கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, ஐஎஸ்ஏ உறுப்பு நாடாக அமெரிக்கா இணைந்துள்ளதாக அறிவித்தார். நவம்பர் 30, 2015 அன்று பாரிஸில் நடந்த COP21 இல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரால் ISA தொடங்கப்பட்டது.

6. ஜன்ஜாதிய கௌரவ் தினம் (Janjatiya Gaurav Divas) - நவம்பர் 15

பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டா  (Bhagwan Birsa Munda) பிறந்த  தினமான நவம்பர் 15    ஜன்ஜாதிய கௌரவ் தினமாக  (Janjatiya Gaurav Divas) அனுசரிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தான் பிர்சா முண்டா. ஜார்கண்ட் மாநிலம் சோட்டா நாக்பூர் பகுதியில் 1875ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பிறந்தார். 25 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்த பிர்சா முண்டா, ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடினார். ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைத் தாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் என்பதால், அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (((தர்த்தி அபா) )) என்றே இன்று வரை அழைத்து மகிழ்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு இவரது பிறந்த நாளில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கபட்டது.

7. ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ வெற்றி

ஜப்பான் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக அவா் மீண்டும் தேர்வு செய்யப்பட்டாா்.அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்ற காரணத்தால் அவரின் பதவிக் காலம் முடிவதற்கு சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை இராஜிநாமா செய்தாா்.

8. இந்திய கடற்படைத் தளபதியின் அடுத்த தலைவராக வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் நியமிக்கப்பட்டுள்ளாுு

வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் கடற்படையின் அடுத்த தலைவராக இருப்பார் என்று பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. வைஸ் அட்மிரல் குமார் தற்போது மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாக கொடி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.நவம்பர் 30 ஆம் தேதி தற்போதைய அட்மிரல் கரம்பீர் சிங் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது அவர் இந்திய கடற்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.

9. CISF தலைவராக IPS அதிகாரி ஷீல் வர்தன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

இரண்டு முக்கிய மத்திய ஆயுதக் காவல் படைகளான (CAPF) மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) ஆகியவற்றின் தலைவர்களை மத்திய அரசு நியமித்து உள்ளது.இதில் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு இயக்குநர் ஷீல் வர்தன் சிங் புதிய CISF டிஜியாகவும், தேசிய போலீஸ் அகாடமி இயக்குநர் அதுல் கர்வால் NDRF டிஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நியமனங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

10.இந்தியாவின் 72-வது கிராண்ட் மாஸ்டர் - மித்ரபா குஹா

செஸ் போட்டிகளில் "கிராண்ட் மாஸ்டர் " பட்டம் உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. இதை அடைய ஒரு வீரர் 2500  எலோ புள்ளிகள்  அல்லது அதற்கு மேல் பெறவேண்டும் . இந்தியாவின்  மித்ரபா குஹா செர்பியாவில் நடைபெற்ற செஸ் தொடரில்  2500 புள்ளிகளை அடைந்ததன் மூலம்  72-வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். ஏற்கெனவே கடந்த மாதம் இந்தியாவின் 70- வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை தெலுங்கானாவின் ராஜா ரித்விக்கும், 71- வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை சங்கல்ப் குப்தாவும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

11. சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி - முனீஸ்வர் நாத் பண்டாரி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இவர் கடந்த 11 மாதங்களில் பல வழக்குகளை விசாரித்துப் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி கொலிஜியம் குழுக் கூட்டம் டெல்லியில் நடந்தது.

12. காலநிலை மாற்றம் செயல்திறன் குறியீடு: இந்தியா 10வது இடத்தில் உள்ளது

ஜெர்மன்வாட்ச் வெளியிட்ட உலகளாவிய காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (CCPI) 2022 இல் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது. 2020ல் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக காலநிலை செயல்திறன் கொண்ட முதல் 10 சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.இதற்கிடையில், ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் மூன்று இடங்கள் மீண்டும் காலியாக உள்ளன, ஏனெனில் நாடு எதுவும் CCPI இல் ஒட்டுமொத்தமாக மிக உயர்ந்த மதிப்பீட்டை அடையும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.முன்னேறி, CCPI 2022 இல் டென்மார்க் நான்காவது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து முறையே ஸ்வீடன் (5வது), மற்றும் நார்வே (6வது) உள்ளன.

13. தேசிய கல்வி தினம்: நவம்பர் 11

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11 தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.இந்திய விடுதலைக்குப் பிறகு உருவான அரசில், முதல் கல்வி அமைச்சராக பணியாற்றியவர். அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கும் பாடுபட்டார். உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தாம் பாரத ரத்னா விருது தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் மறுத்துவிட்டார். அவர் மறைந்த பிறகு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

14.விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

15. தமிழ் அகராதியியல் நாள் / வீரமாமுனிவரின் பிறந்த நாள் - நவம்பர் 8

வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8-ந்தேதி தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படுகிறது. இத்தாலியில் உள்ள காஸ்டிகிளியோன் என்ற ஊரில் கண்டல்போ பெஸ்கி - எலிசபெத் தம்பதியருக்கு மகனாக கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்கள் 1680 ஆம் ஆண்டு பிறந்தார்.  1698 ஆம் ஆண்டு பெஸ்கி அவர்கள் இயேசு சபையில் சேர்ந்து  லத்தீன், பிரெஞ்சு, கிரீக் மொழிகளை கற்று அதில் நல்ல புலமையும் பெற்றதோடு வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து  பின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.1813ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனது மறைப்பணி பொருட்டு, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று இறுதியாக, திருநெல்வேலி வடக்கன்குளம், கயத்தாறு பகுதியில் ஞானப் பணியினைத் தொடர்ந்தவர், தமிழ் மொழியின் மீது கொண்டிருந்த வற்றாத பற்றின் காரணமாக, தமிழ்மொழியினைப் பிழையின்றி கற்றிடத் தொடங்கினார். “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினிற்கேற்ப, அந்நிய நாட்டில் பிறந்து நம் அமுதத் தமிழ்பால் கொண்டிருந்த அளவற்ற ஆர்வத்தினையும் வற்றாத தமிழ்ப் புலமையினையும் கண்டு வியந்த நம் தமிழ் மக்கள், அவரை வீரமாமுனிவர் என்றே அன்புடன் அழைத்ததை பெருமையோடு ஏற்றுக் கொண்டு, தன்வாழ்நாளின் இறுதிவரை வீரமாமுனிவர் என்றே வலம் வந்து சிறந்துயர்ந்தார் அழகுத் தமிழில் அரிய பல இலக்கியப் படைப்புகளையும் இலக்கண நூல்களையும் எழுதி இருந்தாலும், தமிழ்மொழி இதுவரை காணாத வகையில் தமிழ்ச்சொற்களுக்கு அகரமுதலி எழுத்து வரிசையில் முதல் தமிழ் அகராதியாம் “சதுரகராதி” உருவாக்கி சாதனை படைத்து  தமிழ் வரலாற்றில் உச்சம் தொட்டார். ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தும் அகரமுதலி எழுத்து வரிசையில் தொகுத்து அவற்றிற்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்துரைப்பதும், சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள இடம், அது வழங்கும் நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதே சதுரகராதி ஆகும். முதுமொழியாம் தமிழ் மொழியின் பொருள் கூறும் நிகண்டுகள் பல இருந்தாலும், நிகழ்காலத்தில் தமிழ் மொழியின் செம்மையினை வெளிப்படுத்தும் முதல் அகராதியை உருவாக்கி அதற்கு ‘கருவூலம்’ என்று பெயர் சூட்டிய பெருமையும் தமிழ் முனியாம் வீரமாமுனிவரையே சாரும்.

Title of the document Title of the document